background cover of music playing
Poovukkul (From "Jeans") - Unnikrishnan

Poovukkul (From "Jeans")

Unnikrishnan

00:00

06:53

Song Introduction

"பூவுக்குள்" என்பது 1998 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப் திரைப்படம் "ஜீன்ஸ்"இல் இடம்பெற்ற ஒரு மனமாற்றும் பாடல் ஆகும். இசையை ஏ. ஆர். ரஹ்மான் அமைத்திருப்பார், திரைப்படத்தின் பாடல்களை வைரமுது எழுதியுள்ளார். உன்னிக்ருஷ்ணன் பாடிய இந்தப் பாடல் அதன் இனிய மெளலிகை மற்றும் காதல், இயற்கையைப் பற்றிய அழகான வரிகளில் பாராட்டப்பட்டது. "ஜீன்ஸ்" திரைப்படத்தில் இந்த பாடல் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது மற்றும் தமிழ் இசை ரசிகர்களின் மனதில் நீண்டநாள் நினைவில் இருக்கும் ஒன்று.

Similar recommendations

Lyric

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்

வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்

துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்

குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்

அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே

உண்டான காதல் அதிசயம்

பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்

படர்கின்ற காதல் அதிசயம்

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்

நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே

அலைக்கடல் தந்த மேகத்தில்

சிறு துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே

மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்

மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே

உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்

உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்

நினைத்தால் நினைத்தால் அதிசயமே

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே

உண்டான காதல் அதிசயம்

பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்

படர்கின்ற காதல் அதிசயம்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்

வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்

துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்

குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்

அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்

பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே

உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் பூவே நீ எட்டாவததிசயமே

வான் மிதக்கும் உன் கண்கள்

தேன் தெறிக்கும் கன்னங்கள்

பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே

நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே

நகம் என்ற கிரீடமும் அதிசயமே

அசையும் வளைவுகள் அதிசயமே

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே

உண்டான காதல் அதிசயம்

பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்

படர்கின்ற காதல் அதிசயம்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்

வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்

துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்

குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்

அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்

- It's already the end -