background cover of music playing
Ithazhil Kathai - S. P. Balasubrahmanyam

Ithazhil Kathai

S. P. Balasubrahmanyam

00:00

05:21

Similar recommendations

Lyric

இதழில் கதை எழுதும் நேரமிது

இதழில் கதை எழுதும் நேரமிது

இன்பங்கள் அழைக்குது-ஆ-ஆ

மனதில் சுகம் மலரும் மாலையிது

மான் விழி மயங்குது-ஆ-ஆ

மனதில் சுகம் மலரும் மாலையிது

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே

இருகரம் துடிக்குது தனிமையில் நெருங்கிட

இனிமையும் பிறக்குது

இதழில் கதை எழுதும் நேரமிது

காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக் கண்டு

ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்

நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும் போது

நீர் ஓடை போல என் நெஞ்சம் இனிக்கும்

இனிய பருவமுள்ள இளங்குயிலே

இனிய பருவமுள்ள இளங்குயிலே

ஏன் இன்னும் தாமதம்

மன்மத காவியம் என்னுடன் எழுது

நானும் எழுதிட இளமையும் துடிக்குது

நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது

ஏங்கி தவிக்கையில் நாணமும் எதற்கடி

ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி

காலம் வரும் வரை பொறுத்திருந்தால்

கன்னி இவள் மலர்கரம் தழுவிடுமே

காலம் என்றைக்கு கனிந்திடுமோ

காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ

மாலை மணமாலை இடும் வேளைதனில்

தேகம் இது விருந்துகள் படைத்திடும்

இதழில் கதை எழுதும் நேரமிது

இன்பங்கள் அழைக்குது-ஆ-ஆ

மனதில் சுகம் மலரும் மாலையிது

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்

கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே

பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த

மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா

அழகை சுமந்து வரும் அழகரசி

அழகை சுமந்து வரும் அழகரசி

ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும்

சுந்தர நிலவோ

நாளும் நிலவது தேயுது மறையுது

நங்கை முகமென யாரதை சொன்னது

மங்கை உன் பதில் மனதினை கவருது

மாறன் கணை வந்து மார்பினில் பாயுது

காமன் கணைகளை தடுத்திடவே

காதல் மயில் துணை என வருகிறது

மையல் தந்திடும் வார்த்தைகளே

மோகம் எனும் நெருப்பினை பொழிகிறது

மோகம் நெருப்பானால் அதை தீர்க்கும்

ஒரு ஜீவநதி அருகினில் இருக்குது

மனதில் சுகம் மலரும் மாலையிது

மான் விழி மயங்குது-ஆ-ஆ

இதழில் கதை எழுதும் நேரமிது

இன்பங்கள் அழைக்குது-ஆ-ஆ

இதழில் கதை எழுதும் நேரமிது

- It's already the end -