background cover of music playing
Aagaya Suriyanai (From "Samurai") - Harish Raghavendra

Aagaya Suriyanai (From "Samurai")

Harish Raghavendra

00:00

05:24

Song Introduction

“சமுராய்” திரைப்படத்தின் "ஆகய சூரியனை" பாடலை பிரபல பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார். இந்த தமிழ் பாடல் அதன் இனிய மெட்டோடிகள் மற்றும் உணர்ச்சிகரமான வரிகளால் ரசிகர்களிடையே பெரும் விருப்பத்தை பெற்றுள்ளது. திரைப்படத்தின் கதையை மேலும் வலுப்படுத்தும் இந்த பாடல், இசை ரசிகர்களுக்கு நிச்சயமாக பிடித்தமானதாகும்.

Similar recommendations

Lyric

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடி நான்

என் எண்ணம் எதுவோ

கிளி தான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான்

உன்னை கொஞ்சும் என்னமோ

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே

உன் எண்ணம் என்னவோ

சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே

என்னை கொல்லும் என்னமோ

காதல் பந்தியில்

நாமே உணவுதான்

உண்ணும் பொருளே உன்னை உண்ணும்

விந்தை இங்கேதான்

காதல் பார்வையில்

பூமி வேறு தான்

மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும்

மாறுதல் இங்கேதான்

உன் குளிருக்கு இதமாய்

என்னை அடிக்கடி கொளுத்து

என் வெயிலுக்கு சுகம் தா

உன் வேர்வையில் நனைத்து

காதல் மறந்தவன்

காமம் கடந்தவன்

துறவை துறந்ததும் சொர்கம் வந்தது

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

என்னை கண்டதும்

ஏன் நீ ஒளிகிறாய்

டோரா போரா மலை சென்றாலும்

துரத்தி வருவேனே

உன்னை நீங்கி நான்

எங்கே செல்வது

உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே

ஒளிந்து கொல்வேனே

அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி

நீ கண்டு கண்டு பிடித்தால்

பின் காமன் ஆட்சி

கத்தி பறித்து நீ

பூவை தெளிக்கிறாய்

பாரம் குறைந்ததில் ஏதோ நிம்மதி

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே

உன் எண்ணம் என்னவோ

சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே

என்னை கொல்லும் என்னமோ

- It's already the end -