00:00
04:39
இந்தப் பாடலைப் பற்றி தற்போது தகவல்கள் கிடையாது.
ஏதேதோ பெண்ணே நீ வந்ததாலே
தண்ணீரில் இலை போல் மிதக்கிறேன்
என் காற்றில் இன்று உன் சுவாசம் தேடி
இன்றேனோ விண்ணோடு பறக்கிறேன்
என் ஆசை நினைப்பது ஏராளம்
என்றாலும் என்னிடம் மொழி இல்லை
பெண் ஆசை மறைப்பது ஏராளம்
அதை எல்லாம் சொல்லிட வழி இல்லை
ஓ அன்பே என் அன்பே என் இதயத்தை
உன் கையில் நான் தந்தேன் ஓர் கடிதத்தை
உன் இதயம் என் வசத்தில்
என் இதயம் உன் தடத்தில்
இருவருமே ஓர் இடத்தில்
காதலெனும் கலவரத்தில் ஹோ
♪
அன்பே என் ஞாபகம் தீண்டி
உன் தூக்கம் தொலைந்ததா
அங்கே என் யோசனை வந்தே
உன் ஏக்கம் அலைந்ததா
காதலின் கைகளில் பொம்மையாய் உடைகிறேன்
காயங்கள் உண்மையில் இன்பம்தான் அறிகிறேன்
உன் இதயம் என் வசத்தில்
என் இதயம் உன் தடத்தில்
♪
வெவ்வேறு வேர்களில் பிறந்தோம்
நம் காதல் இணையுமா
மனம் ஒன்றி சேர்ந்திடும் போது
மெய்க்காதல் இறக்குமா
காலத்தை காதலால் வென்று நாம் வாழுவோம்
காதலே உண்மையில் அன்பென பாடுவோம்
உன் இதயம் என் வசத்தில்
என் இதயம் உன் தடத்தில்
ஏதேதோ பெண்ணே நீ வந்ததாலே
தண்ணீரில் இலை போல் மிதக்கிறேன்
என் காற்றில் இன்று உன் சுவாசம் தேடி
இன்றேனோ விண்ணோடு பறக்கிறேன்
என் ஆசை நினைப்பது ஏராளம்
என்றாலும் என்னிடம் மொழி இல்லை
பெண் ஆசை மறைப்பது ஏராளம்
அதை எல்லாம் சொல்லிட வழி இல்லை