background cover of music playing
Naan Aval Illai - Karthik

Naan Aval Illai

Karthik

00:00

04:36

Similar recommendations

Lyric

நான் அவள் இல்லை நான் அவள் இல்லை

அழகிலும் குணத்திலும் எதிலும் நான் அவள் இல்லை

உன் மேலே காதல் கொண்டேன்

உன் வானத்தில் ரெண்டாம் நிலவாய் என்னை பூக்க செய்வாயா?, செய்வாயா?

அவள் எங்கே விட்டுப் போனாளோ

அங்கே தொடங்கி உன்னை நான் காதல் செய்வேனே

ஆனால் அன்பே ஆனால் அன்பே

அவளுக்கு கொடுத்த இதயத்திலே

உனை வைத்து பார்க்க தயங்குகிறேன்

ஆனால் அன்பே ஆனால் அன்பே

அவள் விட்டுப் பறந்த உலகத்திலே

உன்னோடு பறக்க முயலுகிறேன்

என் வானிலே ஒரு முகிலாய் நீ தோன்றினாய்

மெதுவாக நீ வானமாய் விரிந்தாயடி என் நெஞ்சிலே

என் பூமியில் ஒரு செடியாய் பூ நீட்டினாய்

மெதுவாக நீ காடென படர்ந்தாயடி என் நெஞ்சிலே

உன்னாலே விழியோடும் சிரிக்கின்றேன் மீண்டும்

இன்று உன்னாலே எனை மீண்டும் திறந்தேன் பெண்ணே

இருளோடு நேற்றை நான் தேடினேன் எதிர்கால தீபம் காட்டினாய்

ஆனால் அன்பே ஆனால் அன்பே

அவளுக்கு கொடுத்த இதயத்திலே

உனை வைத்து பார்க்க (உனை வைத்து பார்க்க)

வா என்று நான் சொல்லும் முன்னே

என் பிள்ளைக்கு தாயென்று ஆனாயே நீ அன்று

ஏனென்று நான் கேட்கும் முன்னே

நீ காதின் ஓரத்தில் முத்தத்தில் சொன்னாயடி

மடி மீது கிடத்தி

தலை கோதினாய்

உன் காதலால் என் காயம் ஆற்றினாய்

நீதான் அன்பே நீதான் அன்பே

இனி எந்தன் நிலவு, இனி எந்தன் உறவு, இனி எந்தன் கனவு

நீதான் அன்பே நீதான் அன்பே

இனி எந்தன் இதயம், இனி எந்தன் பயணம், இனி எந்தன் உலகமாய் நீ

- It's already the end -