background cover of music playing
Chinna Chinna Mazhai Thuligal (From "En Swasa Katre") - A.R. Rahman

Chinna Chinna Mazhai Thuligal (From "En Swasa Katre")

A.R. Rahman

00:00

05:50

Similar recommendations

Lyric

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி இரு துளி சிறு துளி மழை துளி

பட பட பட பட படவென சிதறுதே

சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ

சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ

சக்கரவாகமோ

மழையை அருந்துமா

நான் சக்கரவாக பறவையாவேனோ

மழையின் தாரைகள்

வைர விழுதுகள்

விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ

சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன் துளியாய் வருவாய்

சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்

பயிர் வேரினிலே விழுந்தாய் நவதானியமாய் விளைவாய்

என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்வாய்

அந்த இயற்கை அன்னை படைத்த

ஒரு பெரிய shower இது

அட இந்த வயது கழிந்தால்

பிறகெங்கு நனைவது

இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது

சக்கரவாகமோ

மழையை அருந்துமா

நான் சக்கரவாக பறவையாவேனோ

மழையின் தாரைகள்

வைர விழுதுகள்

விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்

ஒரு கருப்பு கொடி காட்டியாரும் குடை பிடிக்க வேண்டாம்

இது தேவதையின் பரிசு யாரும் திரும்பி கொள்ள வேண்டாம்

நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்

நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்

நீ கண்கள் மூடி கரையும் போது மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்

கண்கள் மூடி கரையும் போது மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்

சக்கரவாகமோ

மழையை அருந்துமா

நான் சக்கரவாக பறவையாவேனோ

மழையின் தாரைகள்

வைர விழுதுகள்

விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ

சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ

- It's already the end -