background cover of music playing
Ennamo Yeadho - Harris Jayaraj

Ennamo Yeadho

Harris Jayaraj

00:00

05:33

Similar recommendations

Lyric

என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்

வண்ணம் பிறழுது நினைவில்

கண்கள் இருளுது நனவில்

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்

வெட்டி எறிந்திடும் நொடியில்

மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை

என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்

அண்டி அகலுது வழியில்

சிந்திச் சிதறுது விழியில்

என்னமோ ஏதோ சிக்கித் தவிக்குது மனதில்

றெக்கை விரிக்குது கனவில்

விட்டுப் பறக்குது தொலைவில்

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை

நீயும் நானும் யந்திரமா

யாரோ செய்யும் மந்திரமா

பூவே

முத்தமிட்ட மூச்சுக் காற்று பட்டு பட்டு கெட்டுப் போனேன்

பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப் போனேன்

நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்

அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்

சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்

ஏதோ எண்ணம் திரளுது கனவில்

வண்ணம் பிறழுது நினைவில்

கண்கள் இருளுது நனவில்

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்

வெட்டி எறிந்திடும் நொடியில்

மொட்டு அவிழுது கொடியில்

நீயும் நானும் யந்திரமா

யாரோ செய்யும் மந்திரமா

பூவே

எங்களின் தமிழச்சி

என்னமோ ஏதோ you're lookin so fine

மறக்க முடியலையே என் மனமின்று

உன் மனசோ lovely இப்படியே இப்ப

உன்னருகில் நான் வந்து சேரவா என்று

Lady lookin like a cindrella cindrella

Naughty looku விட்ட தென்றலா

Lady lookin like a cindrella cindrella

என்னை வட்டமிடும் வெண்ணிலா

சுத்தி சுத்தி உன்னைத் தேடி

விழிகள் அலையும் அவசரம் ஏனோ

சத்த சத்த நெரிசலில் உன் சொல்

செவிகள் அறியும் அதிசயம் ஏனோ

கனாக்கானத் தானே பெண்ணே கண்கொண்டு வந்தேனோ

வினாக்கான விடையும் காணக் கண்ணீரும் கொண்டேனோ

நிழலைத் திருடும் மழலை நானோ

ஏதோ . எண்ணம் திரளுது கனவில்

வண்ணம் பிறழுது நினைவில்

கண்கள் இருளுது நனவில்

ஓஹோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்

வெட்டி எறிந்திடும் நொடியில்

மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை

- It's already the end -