background cover of music playing
Azhage - Hiphop Tamizha

Azhage

Hiphop Tamizha

00:00

03:38

Similar recommendations

Lyric

அந்த சாலை ஓரம்

ஒரு மாலை நேரம்

மங்கும் இரவின் ஒளியினிலே

நீயும் நானும்

இருகைகள் கோர்த்து

பெண்ணே நடந்து போகையிலே

என்னை தள்ளிவிட்டு நீ நடந்தால்

என் நெஞ்சில் இனம் புரியாத பயம்

எந்தன் கைகளை பிடித்துக்கொண்டால்

அடி என்னுள் தோன்றும் கோடி சுகம்

உந்தன் மடியினிலே

ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி

உந்தன் மிதியடியாய்

இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி

அழகே... அழகே...

நீ அசைந்தால் அசையும் உலகே

அமுதே... அமுதே...

உந்தன் இதழ்கள் தான் என் உணவே

அழகே... அழகே...

நீ அசைந்தால் அசையும் உலகே

அமுதே... அமுதே...

உந்தன் இதழ்கள் தான் என் உணவே

பொன்மலைச் சாரலில்

மல்லிகைப் பூவென

மின்னிடும் தாரகை நீ வரவே

கைகளைக் கூப்பியே

முத்தங்கள் சேர்த்திட

கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்

தேய் பிறையாய் தேய் பிறையாய்

என்னை தேய்த்து போகாதே

நான் தேய்ந்துப் போனாலும்

என் காதல் பௌர்ணமி ஆகிடுமே

காதலிலே காதலிலே

தோல்விகள் கிடையாதே

நான் தோற்றே போனாலும்

எந்தன் காதல் தோர்க்காதே

உந்தன் மடியினிலே

ஒரு நூறு ஆண்டு வாழ வேண்டுமடி

உந்தன் மிதி அடியாய்

இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி

அழகே... அழகே...

நீ அசைந்தால் அசையும் உலகே

அமுதே... அமுதே...

உந்தன் இதழ்கள் தான் என் உணவே

அழகே... அழகே...

நீ அசைந்தால் அசையும் உலகே

அமுதே... அமுதே...

உந்தன் இதழ்கள் தான் என் உணவே

பொன்மலைச் சாரலில்

மல்லிகைப் பூவென

மின்னிடும் தாரகை நீ வரவே

கைகளைக் கூப்பியே

முத்தங்கள் சேர்த்திட

கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்

- It's already the end -