background cover of music playing
Yean Penendru - Mohammed Aslam

Yean Penendru

Mohammed Aslam

00:00

05:20

Similar recommendations

Lyric

ஏன் பெண்ணென்று பிறந்தாய்?

ஏன் என் கண்ணில் விழுந்தாய்?

ஏன் ஒரு பாதி சிரித்தாய்?

என் உயிர் பூவை எரித்தாய்?

முதல் நாள் பார்த்தாய்... உறக்கம் கெடுத்தாய்

முறையா என்றேன், கண்கள் பறித்தாய்

என் வலி தீர ஒரு வழி என்ன?

என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன?

ஏன் பெண்ணென்று பிறந்தாய்?

ஏன் என் கண்ணில் விழுந்தாய்?

நீ சூடும் ஒரு பூ தந்தால்

என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்

உன் வாயால் என் பேர் சொன்னால்

உன் காலடியில் கிடப்பேன்

தூக்கத்தை தொலைத்தேனே, துடிக்குது நெஞ்சம்

தலை போன சேவல் போல், தவிக்குது அங்கம்

இரண்டில் ஒன்று சொல்லிவிடு

இல்லை நீயே கொள்ளியிடு...

ஏன் பெண்ணென்று பிறந்தாய்?

ஏன் என் கண்ணில் விழுந்தாய்?

நோகாமல், பிறர் காணாமல்

உந்தன் ஆடை நுனி தொடுவேன்

என்ன ஆனாலும், உயிர் போனாலும்

ஒரு தென்றல் என்றே வருவேன்

நீ என்னைப் பார்த்தால் தான் துடிக்குது உள்ளம்

நீ என்னைப் பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம்

இமயம் கேட்கும் என் துடிப்பு

ஏனோ உனக்குள் கதவடைப்பு

ஏன் பெண்ணென்று பிறந்தாய்?

ஏன் என் கண்ணில் விழுந்தாய்?

ஏன் ஒரு பாதி சிரித்தாய்?

என் உயிர் பூவை எரித்தாய்?

முதல் நாள் பார்த்தாய்... உறக்கம் கெடுத்தாய்

முறையா என்றேன், கண்கள் பறித்தாய்

என் வலி தீர ஒரு வழி என்ன?

என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன?

ஏன் பெண்ணென்று பிறந்தாய்?

ஏன் என் கண்ணில் விழுந்தாய்?

- It's already the end -