00:00
03:54
அழகா, அழகா
♪
அழகா, அழகா
உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
தின்ன மாங்கனி நான் தரவோ திண்ணை பேச்சென மாறிடவோ
கன்னக்கோலும் நீ இடவே கையில் நானுனை ஏந்திடவோ
சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
ஒரு நன்னாள், நன்னாள் உன்னால் விளையுமே
உள்ளம் உருகுதையா
உன்ன உத்து, உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி, கொஞ்சி பேசையில
♪
அழகா
கவண் வீசும் பயலே உனை நான் மனதோடு மறைத்தே
மல்லாந்து கிடப்பதுவோ
அவளோடு பொறியாய் எனை நீ விரலோடு பிசைந்தே
முப்போதும் ருசிப்பதுவோ
உச்சி தலை முதல் அடி வரை எனை இழுத்தே
முத்தம் பதித்திட முனைவதும் ஏனடி
கச்சை அவிழ்ந்திட அறுபது கலைகளையும்
கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி
கலித்தொகையாய் இருப்பேன் நானே
கலைமானே கரம் சேரடி
வங்க கடலெனும் சங்க தமிழினில் மூழ்கடி
உள்ளம் உருகுதையா
உன்ன உத்து, உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி, கொஞ்சி பேசையில
தின்ன மாங்கனி நான் தரவோ திண்ணை பேச்சென மாறிடவோ
கன்னக்கோலும் நீ இடவே கையில் நானுனை ஏந்திடவோ
சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
ஒரு நன்னாள், நன்னாள் உன்னால் விளையுமே
♪
உள்ளம் உருகுதையா