00:00
04:48
Hey you are my love
You're my destiny
♪
என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனையவேண்டும்
என் நெஞ்சு சின்னக்கொடி
நீதான் என் காதல் செடி
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்
பார்வைகள் புது வார்த்தை பரிமாறுதே
இதயங்கள் இடம்மாறுதே
உன்னால் என் நிமிடங்கள் அழகானதே
வலிக்கூட சுகமானதே
என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனையவேண்டும்
என் நெஞ்சு சின்னக்கொடி
நீதான் என் காதல் செடி
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்
♪
உன்னோடுப் பேசிக்கொள்ள
வார்த்தைகள் சேர்த்துவைத்தும்
உள்ளுக்குள் சிக்கித்தவித்தேன்
உன் பேரை மட்டும் தினம்
நெஞ்சுக்குள் சொல்லிச்சொல்லி
என் பேரை இன்று மறந்தேனே
மஞ்சள் நிலவே
கொஞ்சல் மொழியே
வெட்கத்திமிரே சாய்க்காதே
ஆசைக்கனவே
மீசைப்புயலே
நித்தம் இசையில் நீ கொல்லாதே
என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனையவேண்டும்
என் நெஞ்சு சின்னக்கொடி
நீதான் என் காதல் செடி
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்
♪
உன் மூச்சுக்காற்றுப் பட்டு
பூக்கின்ற பூக்களெல்லாம்
உன் போல வாசனைகள் வீசும்
உன்னோடு நான் இருக்கும்
நேரங்கள் அத்தனையும்
போதாது என்று மனம் ஏங்கும்
மின்னல் விழியே
கண்ணக்குழியே
குட்டிக்கவிதை நீதானே
முத்தத்தடமே
சுட்டித்தனமே
மொத்தச்சுகமும் நீ என்பேனே
என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனையவேண்டும்
என் நெஞ்சு சின்னக்கொடி
நீதான் என் காதல் செடி
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்
பார்வைகள் புது வார்த்தை பரிமாறுதே
இதயங்கள் இடம்மாறுதே
உன்னால் என் நிமிடங்கள் அழகானதே
வலிக்கூட சுகமானதே
என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனையவேண்டும்
என் நெஞ்சு சின்னக்கொடி
நீதான் என் காதல் செடி
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்
ஓஹோ ஓ ஹோ ஓ...
ஓஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ