background cover of music playing
Viziyil Vizhundu - From "Alaigal Oyvatillai" - Sasi Rekha

Viziyil Vizhundu - From "Alaigal Oyvatillai"

Sasi Rekha

00:00

04:01

Similar recommendations

Lyric

ச த ம ப நி ச

ச நி ப ம க ச

ம ம ப ப ப ப

க ம ப க ம க ச

நி நி ச க க க ச ச

நி நி ச க க ம ம ப

ச ச நி நி ப ப ம ம

க க ச ச நி நி ச

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும்

அந்திப் பொழுதில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்

உயிரைத் திருப்பித் தந்து விடு

தனன நனன நனன நனன நனன நனன நனனா

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு

தனன நனன நனன நனன நனன நனன நனனா

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதகதகதக தோம்

தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதகதகதக தோம்

தகதோம் தகதோம் தகதோம் தகதோம்

தகதோம் தகதோம் தகதோம் தகதோம்

உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால், ஆ ஆ ஆ

உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்

அத்தனை ஜன்னலும் திறக்கும்

நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு

அத்தனை திசையும் உதிக்கும்

நீ மல்லிகைப் பூவை சூடிக்கொண்டால்

ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்

நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால்

பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

கல்வி கற்க, நாளை செல்ல

அண்ணன் ஆணையிட்டான்

காதல் மீன்கள், இரண்டில் ஒன்றை

கரையில் தூக்கிப் போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும்அந்திப் பொழுதின் போது

அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு

எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்

உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்

- It's already the end -