00:00
04:50
பூப்போல தீப்போல மான்போல மழைபோல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
கனவுக்குள் அல்ல
கற்பனை அல்ல
வரமாக ஸ்வரமாக உயிா் பூவின் தவமாக வந்தாள்
அடி பிரியசகி
சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய்
கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
♪
பூவுக்குள்ளே பிறந்ததால் வாசங்களால் பேசுகிறாய்
வெண்ணிலவில் வளா்ந்ததால் வெளிச்சம் கோடி வீசுகிறாய்
மங்கையின் கன்னத்தில்
மஞ்சளின் வண்ணங்கள்
வந்ததும் எப்படியோ
மாலையின் வெயிலும்
காலையின் வெயிலும்
சோ்ந்ததால் இப்படியோ
அடி பூமியே நூலகம்
பூக்களே புத்தகம்
என்று நான் வாழ்ந்து வந்தேன்
இன்று பெண்களே நூலகம்
கண்களே புத்தகம்
உன்னிடம் கண்டு கொண்டேன்
அடி பிரியசகி
சொல்லி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
♪
புன்னகையே போதுமடி
பூக்கள் கூட தேவையில்லை
கன்னக்குழி அழகிலே தப்பித்து போனது யாருமில்லை
சோழியை போலவே
தோழி நீ சிரித்து
சோதனை போடுகின்றாய்
நாழிகை நேரத்தில்
தாழிட்ட மனதில்
சாவியை போடுகின்றாய்
ஒரு ஆயிரம் கோடிகள் யுத்தங்கள் சந்திக்க
துணிவும் இருக்குதே
உன் பாா்வைகள் மோதிட காயங்கள் கண்டிட
இதயம் நொறுங்குதே
அடி பிரியசகி
சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய்
கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா