background cover of music playing
Paartha Mudhal - Harris Jayaraj

Paartha Mudhal

Harris Jayaraj

00:00

06:06

Similar recommendations

There are no similar songs now.

Lyric

பார்த்த முதல் நாளே

உன்னை பார்த்த முதல் நாளே

காட்சி பிழை போலே உணர்ந்தேன்

காட்சி பிழை போலே

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்

கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்

என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம்

என்றும் மறையாதே

காட்டி கொடுக்கிறதே

கண்ணே காட்டி கொடுக்கிறதே

காதல் வழிகிறதே

கண்ணில் காதல் வழிகிறதே

உன் விழியில் வழியும் பிரியங்களை

பார்த்தே கடந்தேன் பகல் இரவை

உன் அலாதி அன்பினில்

நனைந்த பின் நனைந்த பின்

நானும் மழை ஆனேன்

காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்

தேடி பிடிப்பது உந்தன் முகமே

தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி

காட்சிக்குள் நிற்பதும் உன் முகமே

எனை பற்றி எனக்கே தெரியாத பலவும்

நீ அறிந்து நடப்பதை வியப்பேன்

உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்

நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்

போகின்றேன் என நீ பலநூறு முறைகள்

விடைபெற்றும் போகாமல் இருப்பாய்

சரியென்று சரியென்று உனை போக சொல்லி

கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்

கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்

காட்டி கொடுக்கிறதே

கண்ணே காட்டி கொடுக்கிறதே

காதல் வழிகிறதே

கண்ணில் காதல் வழிகிறதே

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்

கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்

உன் அலாதி அன்பினில்

நனைந்த பின் நனைந்த பின்

நானும் மழை ஆனேன்

உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்

தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்

தூக்கம் மறந்து நான் உனை பார்க்கும் காட்சி

கனவாக வந்ததென்று நினைத்தேன்

யாரும் மானிடரே இல்லாத இடத்தில்

சிறுவீடு கட்டிக்கொள்ள தோன்றும்

நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை

மரம் தோறும் செதுக்கிட வேண்டும்

கண்பார்த்து கதைக்க முடியாமல் நானும்

தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்

கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்

சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்

சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்

பார்த்த முதல் நாளே

உன்னை பார்த்த முதல் நாளே

காட்சி பிழை போலே உணர்ந்தேன்

காட்சி பிழை போலே

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்

கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்

என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம்

என்றும் மறையாதே

- It's already the end -