background cover of music playing
Sei Yedhavathu Sei - Yuvan Shankar Raja

Sei Yedhavathu Sei

Yuvan Shankar Raja

00:00

04:51

Similar recommendations

Lyric

ஹே ஹேய் தரராஆ ஹா

ஹா செய் ஏதாவது செய்

சொல்லாததை செய்

செய்யாததை செய்

செய் கூடாததை செய்

சூடாவது செய் ஏடாகூடம் செய்

நான் ஜில்லாய் நான் ஜில்லாய்

நான் மாறுகிறேன் முள் முள்ளாய்

சில்லாய் உயிர் துள்ளாய்

என்னை ஊடுருவ வான் வில்லாய்

உன்னை நெய்து நெய்து

உயிர் கொய்து கொய்து

விட நான் வந்தேன்

செய் ஏதாவது செய்

சொல்லாததை செய்

செய்யாததை செய்

செய் கூடாததை செய்

சூடாவது செய் ஏடாகூடம் செய்

உண்டு இருக்கவா

என் உயிருக்கு திரியேற்றி

உதட்டுக்கு நெருப்பேற்றி பஸ்பமாக்கவா

கண்ணை ஈர்க்கவா

உன் உருவுக்குள் நீர் ஊற்றி

கருவுக்குள் வேர் ஊன்றி

கொண்டு செல்லவா

செம்புலன் நீர் போல்

ஓ ஓஹோ

ஐம்புலன் சேர்க

ஓ ஓஹோ

உன் புலன் ஐந்தில்

ஓ ஓஹோ

என் புலன் வாழ்க

ஓ ஓஹோ

என்றும் என்றுமே நின்று நின்று

உன்னை கொன்று கொன்று விடவா

நான் ஜில்லாய் நான் ஜில்லாய்

நான் மாறுகிறேன் முள் முள்ளாய்

சில்லாய் உயிர் துள்ளாய்

என்னை ஊடுருவ வான் வில்லாய்

உன்னை நெய்து நெய்து

உயிர் கொய்து கொய்து

விட நான் வந்தேன்

செய் ஏ ஹே ஓ ஓஹோ

செய் ஏ ஹே ஓ ஓஹோ

செய் ஏ ஹே ஓ ஓஹோ வ வ

ஏய் போர் தொடுக்கவா

மென் மஞ்சங்கள் குடை சாய

வஞ்சங்கள் குளிர்காய

உன்னை கெஞ்சுதே

ஒத்துழைக்கவா

உன் கண் வீரியம் தாங்காமல்

சம்சாரியம் வாங்காமல்

ஆம்பல் வீங்குதே ஹேய் ஹே

கர்மனின் மோட்சம்

ஓ ஹோ

காம சரீரம்

ஓ ஹோ

அண்ட சராசம்

ஓ ஹோ

பெண்ணின் விலாசம்

ஓ ஹோ

அற்று அற்று என்னை பற்று பற்று

உன்னை உற்று உற்று அறிவேன்

செய் ஏதாவது செய்

சொல்லாததை செய்

செய்யாததை செய்

செய் கூடாததை செய்

சூடாவது செய் ஏடாகூடம் செய்

நான் ஜில்லாய் நான் ஜில்லாய்

நான் மாறுகிறேன் முள் முள்ளாய்

சில்லாய் உயிர் துள்ளாய்

என்னை ஊடுருவ வான் வில்லாய்

உன்னை நெய்து நெய்து

உயிர் கொய்து கொய்து

விட நான் வந்தேன்

- It's already the end -