background cover of music playing
Aasaiye Kaathule - S. P. Sailaja

Aasaiye Kaathule

S. P. Sailaja

00:00

04:40

Similar recommendations

Lyric

ஆசையக் காத்துல தூது விட்டு

ஆடிய பூவுல வாடை பட்டு

சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு

பாடுது பாட்டு ஒன்னு

குயில் கேக்குது பாட்ட நின்னு

ஆசையக் காத்துல தூது விட்டு

ஆடிய பூவுல வாடை பட்டு

வாசம் பூவாசம் வாலிபக் காலத்துநேசம்

மாசம் தை மாசம் மல்லிய பூமணம்வீசும்

நேசத்துல, வந்த வாசத்துல

நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது

பிஞ்சும் வாடுது வாடையில

கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும்

சொந்தம் தேடுது மேடையில

ஆசையக் காத்துல தூது விட்டு

ஆடிய பூவுல வாடை பட்டு

தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டதுநானு

மானோ பொன்மானு தேயிலதோட்டத்து மானு

ஓடிவர, உன்னத் தேடிவர,

தாழம்பூவுல தாவுற காத்துல

தாகம் ஏறுது ஆசையில

பாக்கும்போதுல ஏக்கம் தீரல

தேகம் வாடுது பேசையில

ஆசையக் காத்துல தூது விட்டு

ஆடிய பூவுல வாடை பட்டு

சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு

பாடுது பாட்டு ஒன்னு

குயில் கேக்குது பாட்ட நின்னு

பாடுது பாட்டு ஒன்னு

குயில் கேக்குது பாட்ட நின்னு

- It's already the end -