background cover of music playing
Thenpaandi Thamizhe - Duet - Ilaiyaraaja

Thenpaandi Thamizhe - Duet

Ilaiyaraaja

00:00

04:41

Similar recommendations

There are no similar songs now.

Lyric

தென்பாண்டித் தமிழே

என் சிங்காரக்குயிலே

தென்பாண்டித் தமிழே

என் சிங்காரக்குயிலே

இசை பாடும் ஒரு காவியம்

இது ரவிவர்மாவின் ஓவியம்

பாசமென்னும் ஆலயம்

உனை பாட வேண்டும் ஆயிரம்

தென்பாண்டித் தமிழே

என் சிங்காரக்குயிலே

தென்பாண்டித் தமிழே

என் சிங்காரக்குயிலே

வாழ்த்தி உன்னை பாடவே

வார்த்தை தோன்றவில்லையே

பார்த்து பார்த்து கண்ணிலே

பாசம் மாறவில்லையே

அன்பு என்னும் கூண்டிலே

ஆடி பாடும் பூங்குயில்

ஆசை தீபம் ஏற்றுதே

அண்ணன் உன்னை போற்றுதே

தாவி வந்த பிள்ளையே

தாயை பார்த்ததில்லையே

தாவி வந்த பிள்ளையே

தாயை பார்த்ததில்லையே

தாயை போல பார்க்கிறேன்

வேறு பார்வை இல்லையே

மஞ்சளோடு குங்குமம்

கொண்டு வாழ வேண்டுமே

நீ என்றும் வாழ வேண்டுமே

தென்பாண்டித் தமிழே

என் சிங்காரக்குயிலே

தென்பாண்டித் தமிழே

என் சிங்காரக்குயிலே

இசை பாடும் ஒரு காவியம்

இது ரவிவர்மாவின் ஓவியம்

பாசமென்னும் ஆலயம்

உனை பாட வேண்டும் ஆயிரம்

தென்பாண்டித் தமிழே

என் சிங்காரக்குயிலே

தேகம் வேறு ஆகலாம்

ஜீவன் ஒன்று தானம்மா

அன்பு கொண்டு பாடிடும்

அண்ணன் என்னை பாரம்மா

கோவில் தேவையில்லையே

நேரில் வந்த கோவிலே

பாடும் எந்தன் பாவிலே

நாளும் வாழும் தேவனே

கூடு வாழும் குருவிகள்

பாடும் பாச பறவைகள்

கூடு வாழும் குருவிகள்

பாடும் பாச பறவைகள்

வாழ்த்துவேன் உன்னை போற்றுவேன்

வாழ்வெல்லாம் உன்னை ஏற்றுவேன்

காலம் காலம் யாவிலும்

சேர்ந்து வாழ வேண்டுமே

நாம் சேர்ந்து வாழ வேண்டுமே

தென்பாண்டித் தமிழே

என் சிங்காரக்குயிலே

தென்பாண்டித் தமிழே

என் சிங்காரக்குயிலே

இசை பாடும் ஒரு காவியம்

இது ரவிவர்மாவின் ஓவியம்

பாசமென்னும் ஆலயம்

உனை பாட வேண்டும் ஆயிரம்

தென்பாண்டித் தமிழே

என் சிங்காரக்குயிலே

தென்பாண்டித் தமிழே

என் சிங்காரக்குயிலே

- It's already the end -