background cover of music playing
Maanoothu Mandhaielea (Original Motion Picture Soundtrack) - S. P. Balasubrahmanyam

Maanoothu Mandhaielea (Original Motion Picture Soundtrack)

S. P. Balasubrahmanyam

00:00

05:15

Similar recommendations

Lyric

மானூத்து மந்தையில

மாங்குட்டி பெத்த மயிலே

பொட்டப்புள்ள பொறந்ததுன்னு

பொலிகாட்டில் கூவும் குயிலே

தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி

அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

சீரு சுமந்த சாதிசனமே

ஆறு கடந்தா ஊரு வருமே

சீரு சுமந்த சாதிசனமே

ஆறு கடந்தா ஊரு வருமே

மானூத்து மந்தையில

மாங்குட்டி பெத்த மயிலே

பொட்டப்புள்ள பொறந்ததுன்னு

பொலிகாட்டில் கூவும் குயிலே

தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி

அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

சீரு சுமந்த சாதிசனமே

ஆறு கடந்தா ஊரு வருமே

நாட்டுக் கோழி அடிச்சு

நாக்கு சொட்டச் சமைச்சு

நல்லெண்ணெய் ஊத்தி குடு ஆத்தா

மேலு காலு வலிச்சா

வெள்ளப் பூண்டு உரிச்சி

வெல்லம் கொஞ்சம் போட்டு குடு ஆத்தா

பச்சை ஒடம்புக்காரி

பாத்து நடக்க சொல்லுங்க

பிள்ளைக்கு தாய்ப்பால

தூக்கி கொடுக்க சொல்லு

மச்சானை திண்ணையில

போத்திப் படுக்கச் சொல்லு, ஹு-ஹு

மானூத்து மந்தையில

மாங்குட்டி பெத்த மயிலே

பொட்டப்புள்ள பொறந்ததுன்னு

பொலிகாட்டில் கூவும் குயிலே

தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி

அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

சீரு சுமந்த சாதிசனமே

ஆறு கடந்தா ஊரு வருமே

சீரு சுமந்த சாதிசனமே

ஆறு கடந்தா ஊரு வருமே

ஆட்டுப்பால் குடிச்சா

அறிவழிஞ்சு போகுமுன்னு

எருமைப் பால் குடிச்சா

ஏப்பம் வந்து சேருமுன்னு

காராம் பசு ஓட்டி வாராண்டி தாய்மாமன்

வெள்ளி சங்குச் செய்ஞ்சா

வெளக்கி வைக்க வேணுமுன்னு

தங்கத்தில் சங்குச் செய்ஞ்சு

தாராண்டி தாய்மாமன்

பச்சை ஒடம்புக்காரி

பாத்து நடக்க சொல்லுங்க

ஈ எறும்பு அண்டாம

எட்டி இருக்கச் சொல்லு

மச்சானை ஈரத்துணி

கட்டி இருக்கச் சொல்லு, ஹு-ஹு-ஹ

மானூத்து மந்தையில

மாங்குட்டி பெத்த மயிலே, ஐய்யோ

பொட்டப்புள்ள பொறந்ததுன்னு

பொலிகாட்டில் கூவும் குயிலே

தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி

அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

சீரு சுமந்த சாதிசனமே

ஆறு கடந்தா ஊரு வருமே, ஹோய்

சீரு சுமந்த சாதிசனமே

ஆறு கடந்தா ஊரு வருமே

மானூத்து மந்தையில

மாங்குட்டி பெத்த மயிலே, போடேய்

பொட்டப்புள்ள பொறந்ததுன்னு

பொலிகாட்டில் கூவும் குயிலே

- It's already the end -