background cover of music playing
Murandu Pudikkaadhey - Deva

Murandu Pudikkaadhey

Deva

00:00

04:53

Similar recommendations

Lyric

முரண்டு பிடிக்காத

முண்டகக்கண்ணி அம்மா

மொறைச்சு பாக்காத

பாளையத்து அம்மா யம்மா

கண்ண கண்ண உருட்டாத

கருமாரி அம்மா

கத்திய நீ காட்டாத

காளிதேவி அம்மா

அவ ஆக்கி வச்ச சோத்த

நீ மூக்கு முட்ட புடிச்ச

அவ ஊத்தி வச்ச கூழை

உன் நாக்கு ருசிக்க குடிச்ச

அடி சங்கரியே பைரவியே

பட்டுனு வரத்தான் எக்குறியே

பாரேன்டி பாரேன்

அவ தவிப்பத

மனம் மாற கொஞ்சம் மாற

நீ கொதிப்பத

முரண்டு பிடிக்காத

முண்டகக்கண்ணி அம்மா

மொறைச்சு பாக்காத

பாளையத்து அம்மா யம்மா

கண்ண கண்ண உருட்டாத

கருமாரி அம்மா

கத்திய நீ காட்டாத

காளிதேவி அம்மா

வேப்பில்லைய இடுப்புல சுத்தி

எங்க இடுப்ப சுத்தி

வேண்டி வேண்டி கோவிலை சுத்தி

உன் கோவில சுத்தி

கன்னத்துல அழகுவேல் குத்தி

அம்மா அழகு குத்தி

பால் குடங்கள் எடுத்த

அந்த பாலகி முகத்தை

பாரேன் பாரேன் யம்மாடி

முட்டை பாலும் உனக்கு தந்தா

சுட்ட மீனும் படையல் வச்சா

கட்டு கழுத்து தாளிய நீ

காவு கேட்டு நிக்குறியே

யம்மா பத்தினிங்க விரதத்துக்கு

சக்தி ஒன்னு இருக்குதுனா

பெத்தவளே மனம் இறங்கு

பாசத்துக்குள் நீ அடங்கு

அம்மா கடல் நீயே கொதிச்சிபுட்டா

சூடாத்த நீரேது காளி நீ

மீனாட்சியா மாறம்மா

அம்மா கற்பூர தீபமேந்தி

கைவிளக்கு போட்ட அந்த

கற்பரசி வாழ்வை எண்ணி பாரம்மா

அடி பெண்ணினம் தான்

அது என்றும் உன்னினம் தான்

வேண்டுவதும் உன்னிடம் தான்

அடி சத்தியம் பண்ணு சத்தியம் பண்ணு

பக்தரை காக்க என்னிடம்வந்து

சத்தியம் பண்ணு யம்மா

முரண்டு பிடிக்காத

முண்டகக்கண்ணி அம்மா

மொறைச்சு பாக்காத

பாளையத்து அம்மா யம்மா

கண்ண கண்ண உருட்டாத

கருமாரி அம்மா

கத்திய நீ காட்டாத

காளிதேவி அம்மா

கொம்பு மஞ்சள் அரைச்சு எடுத்து

அம்மா அரைச்சு எடுத்து

பூசி பூசி குளிக்கவும் வச்சு

உன்ன குளிக்க வச்சு

உச்சி மல்லி மாலையும் கட்டி

உன் கழுத்தில் போட்டு

கும்பிட்டவ வாழ்வை காக்க

வாடி வாடி வாடி வாடி வாடியம்மா

பூப்பதையும் காய்ப்பதையும்

காப்பவளே அம்மா நீ

காப்பவளே கொலை செஞ்சா

கடவுளும் பொய்யாகி அம்மா

குங்குமத்தை கொடுத்த கையால்

மங்கலத்தை பறிக்கலாமா

கொலைவிழி அம்மா நீ

கோரபலி கேக்கலாமா

அம்மா புருஷன் வரம் கேட்டு இங்கே

ஒரு காலில் தவம் இருந்த

மாங்காட்டு காமாட்சி வாடியம்மா

அம்மா குடிசை முதல் மாடி வரை

குடும்பத்து பெண்களுக்கு

தாலியில்லா வாழ்க்கை

இங்கே கேளியம்மா

அடி வந்துவிடு கோபம் விட்டு வந்துவிடு

பூவும் போட்டும் தந்துவிடு

அடி வந்திடு வந்திடு நம்பிடும் பக்தரை

காத்திட்ட இங்கே வந்திடம்மா வந்திடம்மா

முரண்டு பிடிக்காத

முண்டகக்கண்ணி அம்மா

மொறைச்சு பாக்காத

பாளையத்து அம்மா யம்மா

கண்ண கண்ண உருட்டாத

கருமாரி அம்மா

கத்திய நீ காட்டாத

காளிதேவி அம்மா

அவ ஆக்கி வச்ச சோத்த

நீ மூக்கு முட்ட புடிச்ச

அவ ஊத்தி வச்ச கூழை

உன் நாக்கு ருசிக்க குடிச்ச

அடி சங்கரியே பைரவியே

பட்டுனு வரத்தான் எக்குறியே

பாரேன்டி பாரேன்

அவ தவிப்பத

மனம் மாற கொஞ்சம் மாற

நீ கொதிப்பத

- It's already the end -