00:00
03:53
கண்ணன் வரும் வேளை
அந்தி மாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்ன தயக்கம் சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடு பாயும் குறும்புக்காரன் அவனே
கண்ணன் வரும் வேளை
அந்தி மாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்ன தயக்கம் சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்
♪
வான்கோழி கொள்ளும் ஆசை ஆடி தோற்பது
தை மாசம் கொள்ளும் ஆசை கூடி பாா்ப்பது
தோ் கால்கள் கொள்ளும் ஆசை வீதி சோ்வது
ஓா் ஈசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது
கூறவா இங்கு எனது ஆசையை
தோழனே வந்து உளறு வீதியை
கோடி கோடி ஆசை தீரும் மாலை
கண்ணன் வரும் வேளை
அந்தி மாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்ன தயக்கம் சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்
♪
பூவாசம் தென்றலோடு சேர வேணுமே
ஆண் வாசம் தொட்டிடாத தேகம் மெளனமே
தாய் பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்ச பாரம் காதல் ஏந்துமே
நீண்ட நாள் கண்ட கனவு தீரவே
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்கு தொலைவே
கண்ணன் வரும் வேளை
அந்தி மாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்ன தயக்கம் சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடு பாயும் குறும்புக்காரன் அவனே
கண்ணன் வரும் வேளை
அந்தி மாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்ன தயக்கம் சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்