background cover of music playing
Siragugal - Javed Ali

Siragugal

Javed Ali

00:00

05:21

Song Introduction

தற்காலிகமாக இந்த பாடலுக்கான தொடர்புடைய தகவல்கள் கிடைக்கவில்லை.

Similar recommendations

Lyric

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல

இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல

நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

கனவுகள் பொங்குது எதிலே அள்ள

வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள

சுகங்களும் கூடுது உன்னை தேடியே

உன்னை-உன்னை தாண்டி செல்ல

கொஞ்ச காலம், கொஞ்ச தூரம், கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ?

உன்னை-உன்னை தேடி தானே

இந்த ஏக்கம், இந்த பாதை, இந்த பயணம், இந்த வாழ்க்கை ஆனதோ?

கனவுகள் பொங்குது எதிலே அள்ள

வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள

சுகங்களும் கூடுது உன்னை தேடியே

ஓ, நதியே நீ எங்கே என்று கரைகள் தேட கூடாதா?

நிலவே நீ எங்கே என்று முகில்கள் தேட கூடாதா?

ஓ, மழை இரவினில் குயிலின் கீதம் துடிப்பதை யார் அறிவார்?

கடல் மடியினில் கிடக்கும் பலரின் கனவுகள் இவர் அறிவார்

அழகே நீ எங்கிருக்கிறாய்?

வலித்தால் அன்பே நீ அங்கிருக்கிறாய்

உயிரே நீ என்ன செய்கிறாய்?

உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே

பூவின் உள்ளே, நிலவின் மேலே, தீயின் கீழே, காற்றின் வெளியே இல்லையே

உந்தன் கண்ணில், உந்தன் மூச்சில், உந்தன் இரவில்

உந்தன் நெஞ்சில், உந்தன் கையில், உந்தன் உயிரில் உள்ளதே

ஓ, எனக்கே நான் சுமையாய் மாறி என்னை சுமந்து வந்தேனே

உனக்கே நான் நிழலாய் மாறி உன்னை தேடி வந்தேனே

விழி நனைந்திடும் நேரம் பார்த்து இமை விலகிவிடாது

உயிர் துடித்திடும் உன்னை எந்தன் உயிர் ஒதுக்கிவிடாது

உலகம் ஒரு புள்ளி ஆகுதே

நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே

உயிரில் ஒரு பூ வெடிக்குதே

சுகமோ வலியோ எல்லை மீருதே

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல

இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல

நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க

ஒரு இமை மாத்திரம் வலியில் நோக

இடையினில் எப்படி கனவும் காணுமோ

உன்னை-உன்னை தாண்டி செல்ல

கொஞ்ச காலம், கொஞ்ச தூரம், கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ?

உன்னை-உன்னை தேடி தானே

இந்த ஏக்கம், இந்த பாதை, இந்த பயணம், இந்த வாழ்க்கை ஆனதோ?

- It's already the end -