00:00
05:58
இன்னும் ஓர் இரவு
இன்னும் ஓர் நிலவு இன்னும்
ஓர் நினைவு இதோ இதோ
எதிரில் இருந்து பயமுறுத்து
இன்னும் சில தூரம்
இன்னும் சில பாரம் இன்னும்
சில தூரம் இதோ இதோ
எதிரில் இருந்து என்னை
துரத்து
போய் பார்க்க
யாரும் இல்லை வந்து
பார்க்கவும் யாரும் இல்லை
வழிப்போக்கனும் வருவான்
போவான் வழிகள் எங்கும்
போகாது விழியோடு நீயும்
நானும் வாழ்ந்த காலம்
சாகாது
♪
காலடி சத்தம்
எழும்பும்வரை குப்பை
மேட்டில் படுத்திருந்தேன்
கடைசியாய் சிரித்தது
எப்போது ஞாபகம் இல்லை
இப்போது
நதியில் விழுந்த
இலைகளுக்கு மரங்கள்
அழுவது கிடையாது
வேரில் தீயை வைக்கும்
வரை வேதனை அதற்கு
புரியாது
உயிருடன் இருப்பது
இப்போதெல்லாம் வலித்தால்
மட்டும் தெரியும் உன்னுடன்
நானும் இல்லை என்பது
விழித்தால் மட்டுமே புரியும்
♪
ஆஆ இத பாரு
ஆனந்தி இப்ப நான் குடிக்கறது
பேரு கஞ்சா கோவிச்சுக்காத
வேற வழி இல்ல ஏன்னா
இதோட இன்னொரு பேரு
வந்து சிவபானம் நான் சிவனா
இருக்கறதனால குடிக்க வேண்டி
இருக்கு நான் ஏன் சிவன் ஆயிட்டேனா
இந்த உலகத்துல யாரு வாழலாம்
யாரு சாகலாம்க்ற முடிவு எடுக்கற
அதிகாரம் என் கிட்ட இருக்கறதனால
நான் சிவன் ஆயிட்டேன் நான் சிவன்
ஆனதுனால என்ன ஆச்சு நீ என்
பக்கத்துல இல்லனாலும் நீ என்
பாதி ஆயிட்ட பார்வதி ஆயிட்ட
சோ கம் வி வில் கோ இன்
ஹவ் அ டான்ஸ்
♪
நேற்று ஒரு நகரத்தில்
கண்ணாடி பெட்டகத்தில்
வைரம் ஒன்றை பார்த்தேன்
வைரம் ஒன்றை பார்த்தேன்
அவள் கண்கள் ஞாபகம்
வந்ததடா அவள் கண்கள் ஞாபகம்
வந்ததடா வைரம் வாங்கப் பணம்
இல்லை இருந்தும் எனக்கு பயம்
இல்லை கடைக்காரனை கொன்று
விட்டேன் கையில் எடுத்து வந்து
விட்டேன்
முன்பு ஒரு பயணத்தில்
விண்மீன் உறங்கும் நேரத்தில்
புடவை ஒன்றை பார்த்தேனே
தங்கப் புடவை ஒன்றை
பார்த்தேனே
மேல் உடல் ஞாபகம்
வந்ததடி உன் உடல் ஞாபகம்
வந்ததடி
புடவை வாங்கவும்
காசில்லை பெரிதாய்
அலட்டிக் கொள்ளவில்லை
புடவைக்காரனை கொன்று
விட்டு கையில் எடுத்து
வந்து விட்டேன்
காதல் நெஞ்சில்
வந்து விட்டால் காசும்
பணமும் தேவை இல்லை
கடவுளாக மாறி
விட்டால் கொலைகள்
செய்வதில்
குற்றம் இல்லை