00:00
03:18
உயிரும் நடுங்குதே
உன்னையும் ஏந்திடவே
உடைந்த வீரனே
கலங்கி அழுகிறேன்
சுழலும் உலகமே எனக்கு உறைந்ததே
அடுத்த நிமிடமும் நகர மறுக்குதே
மாரில் உன்னைச் சாய்த்து உறங்க வைப்பதா?
இழந்த உயிருக்காக கொல்லி வைப்பதா?
போர்க் கண்ட சிங்கம்
வலி கொண்ட நெஞ்சம்
உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்
அழுகாதே மகனே
என் ஆயுள் உனதே
இமைப் போல உன்னைக் காக்க நான் தேய்கிறேன் ஜீவனே
♪
உயிரும் நடுங்குதே
உன்னையும் ஏந்திடவே
உடைந்த வீரனே
கலங்கி அழுகிறேன்
♪
போர்க் கண்ட சிங்கம்
வலி கொண்ட நெஞ்சம்
உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்
அழுகாதே மகனே
என் ஆயுள் உனதே
இமைப் போல உன்னைக் காக்க நான் தேய்கிறேன் ஜீவனே