background cover of music playing
Pungatru Un Peru Solla - K. S. Chithra

Pungatru Un Peru Solla

K. S. Chithra

00:00

04:34

Similar recommendations

Lyric

பூங்காற்று உன் பேர் சொல்ல

கேட்டேனே இன்று

நீரூற்று என் தோள் கொஞ்ச

பார்த்தேனே இன்று

தீர்த்தக்கரை ஓரத்திலே

தேன் சிட்டுகள் உள்ளத்திலே

கல்யாண வைபோகம் தான்

நீரூற்று என் தோள் கொஞ்ச

பார்த்தேனே இன்று

மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு

மோகப் பண் பாடுதே

மேலைக் காற்றோடு கை சேர்த்து நாணல்

காதல் கொண்டாடுதே

ஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும்

காலம் இதுவல்லவா?

ஈரச் சிறகோடு இசைபாடித் திரியும்

நேரம் இதுவல்லவா?

ஏதேதோ, எண்ணம் தோன்ற

ஏகாந்தம் இங்கே

நான் காணும், வண்ணம் யாவும்

நீதானே அன்பே

வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்

ஆசைகள் ஈடேறக் கூடும்

பூங்காற்று உன் பேர் சொல்ல

கேட்டேனே இன்று

ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன?

ஜீவன் உன்னோடு தான்

தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட

தேவன் என்னோடுதான்

நீல வான் கூட நிறம் மாறிப் போகும்

நேசம் நிறம் மாறுமா?

கால காலங்கள் போனாலும் என்ன?

காதல் தடம் மாறுமா?

ஓயாமல் உன்னைக் கொஞ்சும்

ஊதாப்பூ வண்ணம்

ராஜாவின் ஆ முத்தம் கொள்ளும்

ரோஜாப்பூ கன்னம்

வாடை தீண்டாத வாழைத் தோட்டம்

ஆனந்த எல்லைகள் காட்டும்

பூங்காற்று உன் பேர் சொல்ல

கேட்டேனே இன்று

நீரூற்று என் தோள் கொஞ்ச

பார்த்தேனே இன்று

தீர்த்தக்கரை ஓரத்திலே

தேன் சிட்டுகள் உள்ளத்திலே

கல்யாண வைபோகம் தான்

பூங்காற்று உன் பேர் சொல்ல

கேட்டேனே இன்று

- It's already the end -