00:00
04:42
இதயம் போகுதே
இதயம் போகுதே
எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று
பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று
பாடுகின்ற பாட்டு
கேட்காதோ
இதயம் போகுதே
♪
மணியோசை கேட்டு
மகிழ்வோடு நேற்று
கைகள் தட்டிய காலை சென்றதெங்கே
அரும்பான என் காதல் மலராகுமோ
மலராகி வாழ்வில் மனம் வீசுமோ
இதயம் போகுதே
எனையே பிரிந்தே
♪
லாலல லாலல லாலல லாலல...
லால லால லால லால...
♪
சுடுநீரில் விழுந்து
துடிக்கின்ற மீன்போல்
தோகை நெஞ்சினில்
சோகம் பொங்குதம்மா
குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ
வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ
இதயம் போகுதே
எனையே பிரிந்தே
♪
தானானா நானானா நா
நா நன்னேனா
தன்னனா...
நானேன்னா...
தந்தனனா
டுர்ர்ர்ரா...
மலைசாரல் ஓரம்
மயிலாடும் நேரம்
காதல் சொல்லவும்
தேவன் இல்லையம்மா
நிழல் போல உன்னோடு நான் சங்கமம்
தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம்
இதயம் போகுதே
எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று
பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று
பாடுகின்ற பாட்டு
கேட்காதோ
இதயம் போகுதே