00:00
04:24
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி?
பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா?
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி?
♪
தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே
தலைப்புச் செய்தி தந்தாயே
தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன்
தலைப்பைக் கையில் தந்தாயே
உறங்கும் போதும் உந்தன் பேரைச்
சொல்லிப் பார்க்கிறேன்
உன்னைக் கண்டு பேசும்போது
உச்சி வேர்க்கிறேன்
இந்தச் சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி?
உன்னைக் கேட்கிறேன்
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
♪
உன்னை எண்ணி என் மேனி மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து தூளானேன்
பார்க்க வந்த சேதி மட்டும்
சொன்ன முல்லையே
பருவம் வந்த தேதி மட்டும்
சொல்லவில்லையே?
நீ பார்வையில் காதலன்
பழக்கத்தில் கோவலன்
சொல்லவில்லையே?
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி?
பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா?
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு ம்ம்ம்ம்...
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன...