background cover of music playing
Nenjangootil Neeye - Vijay Antony

Nenjangootil Neeye

Vijay Antony

00:00

04:35

Similar recommendations

Lyric

ஏ நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே

நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

கட்டி போட்டு காதல் செய்கிறாய்

முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்

காதல் தானே இது காதல் தானே

உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால்

நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை

எண்ணம் யாவையும் அழித்து விட்டேன்

இன்னும் பூமுகம் மறக்கவில்லை

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே

நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

ஏ விண்ணை துடைக்கின்ற முகிலை

வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்திரத்தை

என்னை தேடி மண்ணில் வரவழைத்து

உன்னை காதலிப்பதை உரைப்பேன்

இன்று பிறக்கின்ற பூவுக்கும்

சிறு புல்லுக்கும் காதல் உரைத்து முடித்தேன்

உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும்

இன்னும் சொல்லவில்லையே இல்லையே

லட்சம் பல லட்சம் என்று தாய் மொழியில் சொல் இருக்க

ஒத்த சொல்லு சிக்கவில்லை எதனாலே

பந்தி வச்ச வீட்டுகாரி பாத்திரத்தை கழுவிட்டு

பட்டினியாய் கிடப்பாளே அது போலே

நெஞ்சாங்கூட்டில், நெஞ்சாங்கூட்டில்

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே

நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

சின்ன சின்ன செல்ல குறும்பும்

சீனி சிரிப்பும் என்னை சீரழிக்குதே

விறு விறுவென வளரும் பழம்

எந்தன் விரதங்களை வெல்லுதே

உன்னை கரம் பற்றி இழுத்து

வலை உடைத்து காதல் சொல்லிட சொல்லுதே

வெட்கம் இரு பக்கம் மீசை முளைத்து

என்னை குத்தி குத்தியே கொல்லுதே

காதல் எந்தன் வீதி வழி கைய வீசி வந்த பின்னும்

கால் கடுக்க காத்திருக்கு எதனாலே

February மாதத்துக்கு நாளு ஒன்னு கூடிவர

ஆண்டு நாலு காத்திருக்கும் அது போலே

நெஞ்சாங்கூட்டில், நெஞ்சாங்கூட்டில்

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே

நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

காதல் தானே இது காதல் தானே

உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால்

நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை

எண்ணம் யாவையும் அழித்து விட்டேன்

இன்னும் பூமுகம் மறக்கவில்லை

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே

நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே

நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

- It's already the end -