00:00
04:17
இந்த பாடலைப் பற்றிய தொடர்புடைய தகவல்கள் இப்போதைக்கு இல்லை.
வா வெண்ணிலாவே
வாடாத பூவே
என் வாழ்வில் மீண்டும்
எனை ஈன்ற தாயே
கண்ணோடு இமையாய்
சுகமான சுமையாய்
இரு கையில் ஏந்தி தாலாட்டுவேனே
காற்றோடு தலை கோதி
நதியோடு தவழ்ந்து
உயிரோடு உயிராக உறவாடும் அழகே
பனியோடு விளையாடி
மலர் ஊஞ்சலாடி
தரை வந்து தமிழ் பேசும் இருகால் வெண்ணிலவே
சிறகாக உன்னை
நான் ஏந்தி செல்வேன்
சிணுங்காமல் உன்னை
நான் பார்த்து கொள்வேன்
ஒரு கோடி இன்பங்கள்
உனை பார்த்த நொடியில்
நான் வாழும் நாள் மட்டும்
நீ எந்தன் மடியில்
உனை ஈன்ற பொழுதிங்கு
கடவுள் தன் முகம் பார்த்த பொழுது
உன் பாதம் தொழுது
ஆராரிராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிரோ
ஆராரிராரோ ஆராரிரோ
♪
எல்லோர்க்கும் இங்கே
முகமூடி வாழ்க்கை
கண்ணே உன் முகம் போல நிஜம் ஏது
உலகத்தின் ஓசை ஓயாது கண்ணே
என் தோளில் தலை சாய்ந்து நீ தூங்கு
இன்னும் இன்னும்
நெடும்தூரம் சென்றால்
அன்பென்னும் ஊர் சேரலாம்
பொன்னும் பொருளும்
தேடாத உறவை
அவ்வூரில் நீ காணலாம்
உன் பேரை சொன்னால்
எல்லோர்க்கும் தன்னால்
இதயத்தின் கதவொன்று
அன்போடு திறக்கட்டும்
அழகே அமுதே என் உயிரே
ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிரோ
ஆராரிராரோ ஆராரிரோ
ஆராரிராரோ ஆராரிரோ