background cover of music playing
Idhayane - Anirudh Ravichander

Idhayane

Anirudh Ravichander

00:00

03:42

Similar recommendations

Lyric

இதயனே என்னை என்ன செய்கிறாய்

இனிமைகள் என்னில் செய்து போனாய்

இதயனே என்ன மாயம் செய்கிறாய்

இரவுகள் வெள்ளையாக்கிப் போனாய்

வானம் விரிகிறதே

நான் என் கோணம் மாற்ற, எல்லாம் புரிகிறதே

நீ என் சிணுங்கள் ஆற்ற

பொய்கள் நீங்குதே, உண்மை தோன்றுதே

உன்னை தோழனென்று என் இதழ்கள் கூறுதே

பூமி மாறுதே, வண்ணம் ஏறுதே

உன்னை காதல் என்று எந்தன் நெஞ்சம் கூறுதே

உன்போலே யாரும் யாரும் இல்லை மண்மேலே

ஓர் எல்லையற்ற காதல் கொண்டேன் உன்மேலே

நிபந்தனைகள் ஏதும் என்னில் இல்லை

காரணங்கள் இல்லை, கேட்காதே சொன்னாலும் ஏற்காதே

உன்போலே யாரும் யாரும் இல்லை மண்மேலே

ஓர் எல்லையற்ற காதல் கொண்டேன் உன்மேலே

நிபந்தனைகள் ஏதும் என்னில் இல்லை

காரணங்கள் இல்லை, கேட்காதே சொன்னாலும் ஏற்காதே

இதயனே என்னை என்ன செய்கிறாய்

இனிமைகள் என்னில் செய்து போனாய்

இதயனே என்ன மாயம் செய்கிறாய்

இரவுகள் வெள்ளையாக்கிப் போனாய்

எதிரும் புதிரும் என்று உன்னை என்னை நான் நினைக்க

உனது உதிரம் என்று உன்னை மாற்றினாய்

சருகு சருகு என்று நான் உதிர்ந்து வீழும் போதும்

சிறகு சிறகு தந்து வானில் ஏற்றினாய்

முதல் முறை எனது ஆளைத்தாண்டி தோளைத்தாண்டி கேள்வியின்றி உள்ளே செல்கிறாயோ

முதல்முறை எனது நெஞ்சம்கண்டு உன்னைக்கண்டு கண்கள் கண்டு காதல் சொல்கிறாய்

உன்போலே யாரும் யாரும் இல்லை மண்மேலே

ஓர் எல்லையற்ற காதல் கொண்டேன் உன்மேலே

நிபந்தனைகள் ஏதும் என்னில் இல்லை

காரணங்கள் இல்லை, கேட்காதே சொன்னாலும் ஏற்காதே

உன்போலே யாரும் யாரும் இல்லை மண்மேலே

ஓர் எல்லையற்ற காதல் கொண்டேன் உன்மேலே

நிபந்தனைகள் ஏதும் என்னில் இல்லை

காரணங்கள் இல்லை, கேட்காதே சொன்னாலும் ஏற்காதே

இதயனே என்னை என்ன செய்கிறாய்

இனிமைகள் என்னில் செய்து போனாய்

இதயனே என்ன மாயம் செய்கிறாய்

இரவுகள் வெள்ளையாக்கிப் போனாய்

- It's already the end -