00:00
04:08
There are no similar songs now.
ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு
கண்மணி என் கண்மணி!
♪
ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு
கண்மணி என் கண்மணி!
ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு
கண்மணி என் கண்மணி!
பச்சக் குழந்தையின்னு
பாலூட்டி வளர்த்தேன்
பால குடிச்சிப்புட்டு
பாம்பாக கொத்துதடி
ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு
கண்மணி என் கண்மணி!
♪
ஏது பந்த பாசம்?
எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா
நேசம் சில மாசம்
சிந்தினேன், ரத்தம் சிந்தினேன்
அது எல்லாம் வீண் தானோ?
வேப்பிலை, கரிவேப்பிலை
அது யாரோ நான் தானோ?
என் வீட்டுக் கன்னுக்குட்டி
என்னோட மல்லுக் கட்டி
என் மார்பில் முட்டுதடி
கண்மணி என் கண்மணி!
தீப்பட்ட காயத்தில
தேள் வந்து கொட்டுதடி
கண்மணி கண்மணி
ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு
கண்மணி என் கண்மணி!
♪
நேற்று இவன் ஏணி
இன்று இவன் ஞானி
ஆள கரை சேத்து
ஆடும் இந்தத் தோனி
சொந்தமே, ஒரு வானவில்
அந்த வர்ணம் கொஞ்ச நேரம்
பந்தமே, முள்ளானதால்
இந்த நெஞ்சில் ஒரு பாரம்
பணங்காச கண்டு புட்டா
புலி கூட புல்ல தின்னும்
கலிகாலம் ஆச்சுதடி கண்மணி!
என் கண்மணி!
அடங்காத காள ஒன்னு
அடிமாடா போனதடி
கண்மணி கண்மணி!
ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு
கண்மணி என் கண்மணி!
பச்சக் குழந்தையின்னு
பாலூட்டி வளர்த்தேன்
பால குடிச்சிப்புட்டு
பாம்பாக கொத்துதடி
ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு
கண்மணி என் கண்மணி!