00:00
02:43
அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ
சித்திர பூவே என் செல்லமடி நீ
கண்ணெல்லாம் நீயாகும் கொல்லை மதி நீ
காலமே போனாலும் பிள்ளை மொழி நீ
ஏய் சிமிட்டும் கண்ண பாக்க குடுத்து வச்சேன் நான் ஓ
எனக்கு தந்த வாழ்க்கை உனக்கு மட்டும் தான் ஓ
தொணையின்னு நான் சொல்லி கூட இருப்பேன்
நெஜத்துல என் தொண நீ தான்டி அழகு பூ தான்டி என் ராசாத்தி
♪
உன் கண்ணுல லேசா கண்ணீரா
என் கண்ணு தூவும் கடல் நீரா
குறையாத பாசம் ஒரு ஆறா
தெனந்தோறும் ஏறும் பல நூறா
திட்டி, திட்டி நான் கொஞ்சம் நடிச்சிருப்பேன்
தென்றல் அடிச்சா கூட துடிச்சிருப்பேன்
என்ன விட பல நேரம் உன்ன நெனப்பேன், ஹோய்
தொப்புள் கொடியோட ஒட்டி வந்த பூவே என்னுயிரே நீ தான்டி
அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ
சித்திர பூவே என் செல்லமடி நீ
அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ