00:00
03:18
சூரியன் குடைய நீட்டி
சூறாவளி நடைய காட்டி
வீரமே எங்கும் விதைக்க இங்கு வந்தானே
கொஞ்சமே நாங்க சிரிக்க பங்கு தந்தானே
ஆகாச முகில கூட்டி
பூலோகம் முழுசும் ஓட்டி
மின்னலா இன்னல் தணிக்க தயவு செஞ்சானே
தூறலா மன்ன நெனச்ச தருமநெஞ்சானே
♪
ஒருத்தன் வாளாவான்
மற்றொருத்தன் போர்செய்வான்
ஒருத்தன் கர்ஜன, ஒருத்தன் கல்லன இரட்டை பிரளயமே
ஆணை ஒருத்தன், சேனை ஒருத்தன் இனஞ்சி வளம் வரும் கலகமே
இழுக்கும் மூச்சிலும் இருவர் பேச்சிலும் நட்பு வாசமே
நூறாண்டு வாழனுமே
♪
ஒருத்தன் தடையாவான்
மற்றொருத்தன் தடை வெல்வான்
ஒருத்தன் அசுரன், ஒருத்தன் அரசன் கருத்தில் ஒத்தவரே
காத்து ஒருத்தன், கங்கு ஒருத்தன் பத்தி எரிச்சிடும் நெருப்பரே
இழுக்கும் மூச்சிலும் இருவர் பேச்சிலும் நட்பு வாசமே
நூறாண்டு வாழனுமே
♪
சூரியன் குடைய நீட்டி
சூறாவளி நடைய காட்டி
வீரமே எங்கும் விதைக்க இங்கு வந்தானே
கொஞ்சமே நாங்க சிரிக்க பங்கு தந்தானே