00:00
02:24
என் முதல் நாயகன் நீ!
எந்தன் காவலன் நீ!
என் உயிர் ஆரம்பம் நீ!
நெஞ்சின் ஆசையும் நீ!
தொட்டிலாய் என்னை தூக்கி
ஆடும் தோல்கள் வேண்டுமே!
முத்தமாய் என்னை குத்தும் மீசை வேண்டும் மீண்டுமே!
கனவென நம்பி எழுவேனே
நீ கண் முன் தோன்ற வேண்டுமே!
கடவுளைப் போல எங்கயோ
எனை விட்டுப் போன வானமே!
உயிரென உன்னை காணாமல்
என் உலகம் நின்று போகுமே!
ஒரு முறை என்னை கை தூக்கி
பின் போனால் கூட போதுமே!
♪
என் முதல் நாயகன் நீ!
வாழ்வின் காவலன் நீ!
என் முதல் காதலும் நீ!
எந்தன் தேடலும் நீ!
வேர்வையில் புள்ளி வைத்து
என்னை கோலம் ஆக்கினாய்
மேல் விழும் பாரம் எல்லாம்
நீயே நின்று தாங்கினாய்
நடை வண்டியாகும் விரல் எங்கே?
என் வழி துனையாக வேண்டுமே!
அறவனைப்பாகும் குரல் எங்கே?
அதை மீண்டும் கேட்க தோன்றுமே!
பகையென உன்னை பார்த்தேனே
உன் பாசம் பார்க்கவில்லையே
சிதையினில் வீழும் வரை நானும்
உன் நிழலில் வாழும் பிள்ளையே!