00:00
03:57
சிங் ஸ்ரீராம் பாடிய "அந்திமாலை நேரம்", திரைப்பட "Monster" இன் ஒரு முக்கியமான பாடல். இந்த பாடல் இதமான வரிகள் மற்றும் மனதைத் தொட்ட இசையுடன் ரசிகர்களிடையே விரைவில் பிரபலமாகியுள்ளது. ஸ்ரீராம் அவர்களின் இனிமையான குரலும், இசையமைப்பாளரின் சிறந்த இசையும் இந்த பாடலுக்கு சிறப்பை வழங்கியுள்ளது. "அந்திமாலை நேரம்" திரைப்படத்தின் கதையை மேலும் நனவூட்டும் விதமாக, பாடல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாராட்டுதல்களை பெற்றுள்ளது.
அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே
பேசி பேசி நாளும்
காலம் போக்க தோணும்
நாவிழுந்து வார்த்தை
போர்த்தி கொண்டதே
நதி நீரின் மேலே
வெளிச்சங்கள் போலே
விழுந்தாயே விரைந்தேனே
உருண்டோடினானே
அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே
♪
மொட்டை மாடி மேலே
ஒற்றை மழையாகிறேன்
ஒட்டடையின் மேலே
பட்டாம்பூச்சி பார்க்கிறேன்
உணராத எதுவோ
எனை தாலாட்டுதே
தினம்தோறும் அதையே
மனம்தான் கேட்குதே
சாம்பல் மேலே
பூவின் பாதம்
கோலம் ஆகிறதே
அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே
♪
யாரின் மழை மீது
யாரின் மழை சேர்ந்ததோ
யாரின் குடை வாங்கி
யாரின் மனம் போகுதோ
திறக்காத கதவாய்
பல நாள் போனதே
கதவில்லா வெளியாய்
புது நாள் சேருதே
வட்டம் போலே
வாழ்ந்தேன் காதல்
வாசல் வைக்கிறதே... ஏ...
அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே
பேசி பேசி நாளும் (பேசி பேசி நாளும்)
காலம் போக்க தோணும் (காலம் போக்க தோணும்)
நாவிழுந்து வார்த்தை
போர்த்தி கொண்டதே
நதி நீரின் மேலே
வெளிச்சங்கள் போலே
விழுந்தாயே விரைந்தேனே
உருண்டோடினானே