background cover of music playing
Nee Kaatru Naan Maram - Vidyasagar

Nee Kaatru Naan Maram

Vidyasagar

00:00

05:10

Song Introduction

அதற்கான பாடலுக்கான தகவல்கள் தற்போது கிடைக்கவில்லை.

Similar recommendations

Lyric

நீ காற்று

நான் மரம்

என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ காற்று நான் மரம்

என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ மழை நான் பூமி

எங்கு விழுந்தாலும் ஏந்திக் கொள்வேன்

நீ இரவு நான் விண்மீன்

நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்

நீ காற்று நான் மரம்

என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ அலை நான் கரை

என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்

நீ உடல் நான் நிழல்

நீ விழ வேண்டாம் நான் விழுவேன்

நீ கிளை நான் இலை

உன்னை ஒட்டும் வரைக்கும்

தான் உயிர்த்திருப்பேன்

நீ விழி நான் இமை

உன்னை சேரும் வரைக்கும்

நான் துடித்திருப்பேன்

நீ சுவாசம் நான் தேகம்

நான் உன்னை மட்டும்

உயிர் தொட அனுமதிப்பேன்

நீ காற்று நான் மரம்

என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ வானம் நான் நீலம்

உன்னில் நானாய் கலந்திருப்பேன்

நீ எண்ணம் நான் வார்த்தை

நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்

நீ வெய்யில் நான் குயில்

உன் வருகை பார்த்து

தான் நான் இசைப்பேன்

நீ உடை நான் இடை

உன்னை உறங்கும் பொழுதும்

நான் உடுத்திருப்பேன்

நீ பகல் நான் ஒளி

என்றும் உன்னை மட்டும் சார்ந்தே

நான் இருப்பேன்

நீ காற்று நான் மரம்

என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ மழை நான் பூமி

எங்கு விழுந்தாலும் ஏந்திக் கொள்வேன்

நீ இரவு நான் விண்மீன்

நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்

நீ காற்று நான் மரம்

என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

- It's already the end -