00:00
04:21
அதோ பொன் பிறையா உடைந்திடும் நுரையா
இதோ என் நொடியின் வழிப்பறியா
நாளும் கரையோடும் அலையோடும்
உறவாடும் கிளிஞ்சல் போல் என் நெஞ்சம் நிலையின்றியா
அங்கே தொலை தூரத்தில் சாரல் மழை கண்டேன்
நான் பக்கம் வரும்போது சிறை கம்பியா
தவறென பார்த்த கண் இன்று கலை செய்யுதே
தரிசென பார்த்த மேகங்கள் கடல் பெய்யுதே
கண்கள் காரணம் தேடுதே
உன்னை வந்து சேருதே
போதை கணமே கணமே போகாதிரு நீ
போதை கணமே கணமே போதாதிரு நீ
போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ
நிஜமே நிஜமே நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ
நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாயிரு நீ
தொடாத பாதையோ
கை வீசும் ஆசையோ
♪
நிறைவது என் ஓடையோ
நிகழ்வது யாரின் கதையோ
எனக்கென நீண்ட கிளையில்
குயில் சேருதோ
மரகத பொன் வேலையோ
மனதினில் யாழின் மழையோ
இதமாய் என் காலையோ
கனாவின் ஓராமாக இடாதா கோலமாக
மறைத்து வைத்த ஆசை கை காட்டுதே
நெஞ்சோடு ஆழமாக சொல்லாமல் நீளமாக
சுவைத்திருந்த மௌனம் பொய் ஆகுதே
இருவரி சேர்ந்து காற்றோடு குரலாகுதே
இருபதைத்தாண்டி எதுவோ என் விரலாகுதே
என்னத் தோராணம் ஏறுதே
சேரும் பாலம் போலவே
போதை கணமே கணமே போகாதிரு நீ
போதை கணமே கணமே போதாதிரு நீ
போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ
நிஜமே நிஜமே நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ
நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாய் இரு நீ
தொடாத பாதையோ
கை வீசும் ஆசையோ