background cover of music playing
Sooravalida - D. Imman

Sooravalida

D. Imman

00:00

05:05

Similar recommendations

Lyric

சூறாவளிடா நாங்க

தொட்டாலே சீறும் புலிடா

ஏறி அடிடா ஊரு

ஒன்னாக வேட்டு வெடிடா

சூறாவளிடா நாங்க

தொட்டாலே சீறும் புலிடா

ஏறி அடிடா ஊரு

ஒன்னாக வேட்டு வெடிடா

புழுதி உடம்போட

ஆடுமடா காலு

எழுதி மாளாது எங்க வரலாறு

வாளெடுத்து வகுடெடுத்து சீவும் சீமைடா

எங்க தெக்குத்திசை காரனுக்கு புல்லும் வாளுடா

நிமிர்ந்து நின்னா கருது

நேர்மையின்னா மருது

நிமிர்ந்து நின்னா கருது

நேர்மையின்னா மருது

சூறாவளிடா நாங்க

தொட்டாலே சீறும் புலிடா

ஏறி அடிடா ஊரு

ஒன்னாக வேட்டு வெடிடா

காட்டுப் பனைமரமா

கருப்பா உடம்பிருக்கும்

ஆனாலும் எங்க மனம்

வெள்ள வெள்ள

மூட்டை முதுகிலதான்

நிதமும் சுமந்திடுவோம்

ஆனாலும் பாரம்

எங்க நெஞ்சில் இல்லை

காய்ச்சி போன எங்க

கையிலதான் ரேகை இல்ல

ஆனாலும் கவலையில்லை

நாங்க நெத்தியில

பூசுகிற மண்ணைவிட

திருநீறு ஒசந்ததில்ல

தலைமேல கனத்தத்தான்

ஏத்திவைப்போம்

ஆனா தலைக்குள்ள

கனத்தத்தான் ஏத்தமாட்டோம்

நிமிர்ந்து நின்னா கருது

நேர்மையின்னா மருது

நிமிர்ந்து நின்னா கருது

நேர்மையின்னா மருது

சூறாவளிடா நாங்க

தொட்டாலே சீறும் புலிடா

ஏறி அடிடா ஊரு

ஒன்னாக வேட்டு வெடிடா

ஜல்லிக்கட்டு காளை

இது தாக்குமடி ஆள

வெட்டி வம்பு செஞ்சா

இவன் கட்ட வைப்பான் சேலை

மத்தாப்பூ பூப்போல

பொங்கி சிரிப்பானே

கித்தாப்பூ காட்டாம

கொட்டி கொடுப்பானே

நனைஞ்ச பனைபோல வளத்திதான்

நல்ல மனசு மலைபோல ஒசத்திதான்

சட்டையில அழுக்கிருக்கும்

சவுடாலு நிறைஞ்சிருக்கும்

ஆனாலும் நாங்க

ரொம்ப கெத்து கெத்து

வேர்வை வெளிச்சத்துல

இருட்ட துரத்திடுவோம்

மாறாத அன்பு

எங்க சொத்து சொத்து

சும்மா சண்டித்தனம்

பண்ணிவரும் சல்லிப்பையன்

குதிகாலு நரம்பெடுப்போம்

ஊரு பொண்ணுங்கள

கேவலமா சொன்னவன

பொலி போட்டு வகுந்துருவோம்

ஆதாரம் அம்மான்னு

ஆசை வைப்போம்

அவ காப்பாத்தும் சாமின்னு

பூசை வைப்போம்

நிமிர்ந்து நின்னா கருது

நேர்மையின்னா மருது

நிமிர்ந்து நின்னா கருது

நேர்மையின்னா மருது

நிமிர்ந்து நின்னா கருது

கருது கருது

நேர்மையின்னா மருது

மருது மருது

நிமிர்ந்து நின்னா கருது

நேர்மையின்னா மருது

சூறாவளிடா

- It's already the end -