00:00
03:58
கோடையில மழ போல
என்னுயிரே நீயிருக்க
வாடையிலும் அனலாக
வருவேன் உன் கூட
காலை இளங்கதிராக
கண்ணருகே நீ இருக்க
மாலைவரும் நிலவாகி
தொடுவேன் காத்தோட
போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ?
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ?
போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ?
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ?
♪
காரியம் நூறு செய்து
மண்ணில் வாழ்வது பெரிது இல்லை
உந்தன் காலடி தடமறிந்து
செல்லும் பாதைகள் முடிவதில்லை
ஆலயம் தேடி சென்று
செய்யும் பூசைகள் தேவை இல்லை
உன்னதன் கைவிரல் தொடும் பொழுது
துன்பம் தொலைவிலும் வருவதில்லை
உறவெது வடிவெதுவோ?
கொண்ட உறவுகள் உணர்ந்து தொட
இருளெது ஒளியெதுவோ?
ரெண்டு இருதயம் கலந்து விட
♪
மாறிடும் யாவும் இன்று
சொல்லும் வார்த்தையில் நெசமும் இல்லை
உண்மை காதலை பொருத்தமட்டில்
எந்த மாற்றமும் நிகழ்வதில்லை
ஆசைகள் தீரும் மட்டும்
கொள்ளும் அன்பினில் அழகு இல்லை
வெந்து போகிற வேளையிலும்
அன்பு தீ என்றும் அணைவதில்லை
உறவெது வடிவெதுவோ?
கொண்ட உறவுகள் உணர்ந்து தொட
இருளெது ஒளியெதுவோ?
ரெண்டு இருதயம் கலந்து விட
கோடையில மழ போல
என்னுயிரே நீயிருக்க
வாடையிலும் அனலாக
வருவேன் உன் கூட
காலை இளங்கதிராக
கண்ணருகே நீ இருக்க
மாலைவரும் நிலவாகி
தொடுவேன் காத்தோட
போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ?
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ?
போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ?
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ?