background cover of music playing
Thodu Thoduveneve - Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran - Hariharan

Thodu Thoduveneve - Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran

Hariharan

00:00

04:43

Similar recommendations

Lyric

தொடு தொடு எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்

விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்

மன்னவா

ஒரு கோவில் போலிந்த மாளிகை எதற்காக

தேவியே

என் ஜீவனே

இந்த ஆலையம் உனக்காக

வானில் ஒரு புயல் மழை வந்தால்

அழகே எனை எங்கனம் காப்பாய்

கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து

இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்

சாத்தியமாகவா

நான் சத்தியம் செய்யவா

தொடு தொடு எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்

இந்த பூமியே தீர்ந்து போய்விடில்

என்னை எங்கு சேர்ப்பாய்

நட்சத்திரங்களை தூசு தட்டி

நான் நல்ல வீடு செய்வேன்

நட்சத்திரங்களின் சூட்டில் நான்

உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்

உருகிய துளிகளை ஒன்றாக்கி

என் உயிர் தந்தே உயிர் தருவேன்

ஏ ராஜா

இது மெய்தானா

ஏ பெண்ணே

தினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால்

நான் பாய் விரிப்பேன் என்னை

நான் நம்புகிறேன் உன்னை

தொடு தொடு எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்

விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்

நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை இதில் எங்கு நீச்சலடிக்க

அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்

இந்த அல்லி ராணி குளிக்க

இந்த நீரிலே அன்பு செய்தால்

என்னவாகுமோ என் பாடு

காற்று வந்து உன் குழல் கலைத்தால்

கைது செய்வதென ஏற்பாடு

பெண் நெஞ்சை

அன்பால் வென்றாய்

ஏ ராணி

அந்த இந்திரலோகத்தில் நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்

உன் அன்பு அது போதும்

தொடு தொடு எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்

விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்

மன்னவா

ஒரு கோவில் போலிந்த மாளிகை எதற்காக

தேவியே

என் ஜீவனே

இந்த ஆலையம் உனக்காக

வானில் ஒரு புயல் மழை வந்தால்

அழகே எனை எங்கனம் காப்பாய்

கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து

இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்

சாத்தியமாகவா

நான் சத்தியம் செய்யவா

- It's already the end -