background cover of music playing
Nenjankuzhi - Version 1 - Nivas

Nenjankuzhi - Version 1

Nivas

00:00

05:48

Similar recommendations

Lyric

நெஞ்சாங்குழி ஏங்குதடி

நெத்தி பொட்டு வீங்குதடி

நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்குதடி

உன் நெனப்பு ஓங்குதடி

உள் உசுரு நோகுதடி

கண்ணீர் பட்டு கன்னம் ரெண்டும் வலிக்குதடி

உன்ன விட்டு நான் பிரிஞ்சா வாழ்க்க அத்து போகும்

அழகே கண்ண விட்டு நீ மறஞ்சா

பார்வை செத்து போகும்

நித்தம் உன்ன எண்ணி எண்ணி

நேரம் வத்திப் போகும் அடியே

சுட்டு விரல் நீண்டு நீண்டு தூரம் செத்து போகும்

அடி உன்ன உன்ன நெனச்சு என் உசுர கையில் புடிச்சு

நான் நொந்து வெந்து கெடக்கேன்

சிறு நூலாம் படையா எளச்சு

அடி உன்ன உன்ன நெனச்சு என் உசுர கையில் புடிச்சு

நான் நொந்து வெந்து கெடக்கேன்

சிறு நூலாம் படையா எளச்சு

ஆ... நெஞ்சாங்குழி ஏங்குதடி

நெத்தி பொட்டு வீங்குதடி

நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்குதடி

அடிக்கிற காத்த நிறுத்தி வாய புடுங்க பாப்பேன்

வண்ண வண்ண சிறு பறவைக போனா

உன்ன பத்தி கேப்பேன்

நீ அங்கே எங்கோ நடக்க

அடி இங்கே என் நிலம் துடிக்க

நீ மண்ணில் கண்ணீர் வடிக்க

அது விண்ணைச் சென்று நனைக்க

நீ தேட நான் வாட

அட உன்ன உன்ன நெனச்சு

என் உசுர கையில் புடிச்சு

நான் நொந்து வெந்து கெடக்கேன்

சிறு நூலாம் படையா எளச்சு

நெஞ்சாங்குழி ஏங்கும் ஏங்கும்

நெத்தி போட்டு வீங்கி போகும்

நித்திரைய தொலைச்ச கண்ணு துடி துடிக்கும்

கண்ணுக்குள்ளே உன் முகம் தான்யா

வந்து வந்து போகும்

நெஞ்சு பட்ட பாடு சாமிக்கு சொன்னா

பாரம் கொஞ்சம் தூங்கும்

உன் ஆசய நெஞ்சில் அழிக்க

நான் அமிலம் ஊத்திக் குடிக்க

உன் நினைவை எப்படி மறக்க

வான் நீலத்தை எது கொண்டு அழிக்க

நீ வாட நான் தேட

என் இரவை எல்லாம் கொளுத்தி

அதை எல்லா திசையிலும் செலுத்தி

நான் உயிரோடுல்லதை உணர்த்தி

உயிர் மீட்பேன் உன்னை மலர்த்தி

என் இரவை எல்லாம் கொளுத்தி (கொளுத்தி)

அதை எல்லா திசையிலும் செலுத்தி

நான் உயிரோடுல்லதை உணர்த்தி (உணர்த்தி)

உயிர் மீட்பேன் உன்னை மலர்த்தி

- It's already the end -