00:00
04:51
தனிமையே தனிமையே
உனக்கென்ன இத்தனை தாகம்
நினைவினால் நனைகிறேன்
இது என்ன மந்திர மாயம்
தான்னால் ராட்டினம் போலே
மனம் உன்னை சுற்றுது நாளும்
சொன்னால் கேட்டிட மாட்டேன்
என கண்ணில் கசியுது ஈரம்
உள்ளம் வெள்ள காடானது
உந்தன் நினைவே ஓடம்
வண்ணம் பூசிய நாட்கள்
அதை எண்ணி காலம் ஓடும்
வா வா அருகே வா வா கனவே
வா வா உயிரே வா மூச்சு காற்றே
வா வா அருகே வா வா கனவே
வா வா உயிரே வா மூச்சு காற்றே
♪
தனிமையே தனிமையே
உனக்கென்ன இத்தனை தாகம்
♪
மார்பின் மேலே உன்னை சாய்த்து
கதைகள் சொன்ன தருணங்கள்
வார்த்தை எல்லாம் ஓய்வு கொள்ள
மௌனம் பேசும் பொழுதுகள்
விண்மீன் வெளிச்சத்தில் உன்னோடு
எல்லை மீறிய காலம்
எண்ணும் போதே ஏன் இந்த
நெஞ்சம் போடுது தாளம்
எங்கே நீயோ அங்கே நானும்
வேண்டும் என்று தோன்றுதே
வா வா அருகே வா வா கனவே
வா வா உயிரே வா மூச்சு காற்றே
வா வா அருகே வா வா கனவே
வா வா உயிரே வா மூச்சு காற்றே
♪
தனிமையே தனிமையே
உனக்கென்ன இத்தனை தாகம்
♪
சிறகின் சுவடு காற்றில் ஏது
பறவை திசையை அறிந்திட
பறந்துபோன வசந்தம் தேடி
இதயம் இங்கே உருகிட
பிஞ்சு கைகள் தீண்டாமல்
நெஞ்சு சில நொடி தேம்பும்
எந்தன் தேவதை கொஞ்சும்
மொழி எங்கே என மனம் எங்கும்
எங்கே முடிவென காட்டாமல்
எந்தன் சாலைகள் போகுதே
வா வா அருகே வா வா கனவே
வா வா உயிரே வா மூச்சு காற்றே
வா வா அருகே வா வா கனவே
வா வா உயிரே வா மூச்சு காற்றே