background cover of music playing
Azhage Azhage - Harris Jayaraj

Azhage Azhage

Harris Jayaraj

00:00

05:55

Similar recommendations

Lyric

அழகே அழகே அழகின் அழகே நீயடி

உன் அருகே அருகே அழகை தொலைந்தேன் நானடி

ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி

என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி

நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்

என்னை உன்னிடம் தந்திட வந்தேன்

வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்

நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா?

வேட்டையாளனை வென்றிடும் மானா?

உன்னை நேசித்த காதலன் நானா?

வா கனியே, முக்கனியே

தீயோடும் பனியே

வாராமல் நீ சென்றால்

இவன் தனியே தனியே

வா கனியே, முக்கனியே

தீயோடும் பனியே

உனக்காக உருண்டோடும்

இவன் காலம் இனியே

அழகே அழகே அழகின் அழகே நீயடி

உன் அருகே அருகே அழகை தொலைந்தேன் நானடி

சுடச்சுட நெருப்பென பார்த்தாய்

குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்

கண்கள் இரண்டும் காதல் சொல்லும்

இருந்தும் நடித்தாய்

அடிக்கடி முள்ளென தைத்தாய்

ஆயினும் பூவென பூப்பாய்

இதயக் கதவை இரக்கம் கொண்டு

என்னக்காய் திறப்பாய்

இந்த காதல் என்பது

ஒரு மழலை போன்றது

அது சிணுங்க சிணுங்கத்தான்

கவனம் பிறக்கும்

உனை கெஞ்சி கேட்கிறேன்

எனை கொஞ்ச கேட்கிறேன்

நீ கேட்க மறுக்கிறாய் தொடர்ந்து நடிக்கிறாய்

உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம் வர

கனியே, முக்கனியே

தீயோடும் பனியே

வாராமல் நீ சென்றால்

இவன் தனியே தனியே

வா கனியே, முக்கனியே

தீயோடும் பனியே

உனக்காக உருண்டோடும்

இவன் காலம் இனியே

பலப் பல கனவுகள் இருக்கு

அதை ஏன் சொல்லணும் உனக்கு?

மனசுவிட்டு பேசு நீயும் நண்பனா எனக்கு

பார்த்ததும் பிடித்தது உனக்கு

பழகிட தோனணும் எனக்கு

கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு

நீ கோயில் தேரடி

மரக்கிளையும் நானடி

என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்

நீ காதல் கஜினியா

பகல் கனவில் பவனியா

ஏன் துரத்தி வருகிறாய் நெருங்க நினைகிறாய

உனக்கும் எனக்கும் எதற்கு காதல் வலம் வர

கனியே, முக்கனியே

தீயோடும் பனியே

வாராமல் நீ சென்றால்

இவன் தனியே தனியே

வா கனியே, முக்கனியே

தீயோடும் பனியே

உனக்காக உருண்டோடும்

இவன் காலம் இனியே

அழகே அழகே அழகின் அழகே நீயடி

உன் அருகே அருகே அழகை தொலைந்தேன் நானடி

ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி

என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி

நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்

என்னை உன்னிடம் தந்திட வந்தேன்

வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்

நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா

வேட்டையாளனை வென்றிடும் மானா

உன்னை நேசித்த காதலன் நானா

வா கனியே, முக்கனியே

தீயோடும் பனியே

வாராமல் நீ சென்றால்

இவன் தனியே தனியே

வா கனியே, முக்கனியே

தீயோடும் பனியே

உனக்காக உருண்டோடும்

இவன் காலம் இனியே

வா கனியே, முக்கனியே

தீயோடும் பனியே

வாராமல் நீ சென்றால்

இவன் தனியே தனியே

வா கனியே, முக்கனியே

தீயோடும் பனியே

உனக்காக உருண்டோடும்

இவன் காலம் இனியே

- It's already the end -