00:00
04:18
பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே
கல் என்று நினைத்தேன் உனையே
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா?
எதில் நீ இருந்தாய்?
எங்கோ மறைந்தாய்
உன்னை தேடி அலைந்தேன் எனக்குள்ளே தெரிந்தாய்
இது போதும் எனக்கு வேறு வரங்கள் நூறு வேண்டுமா?
இறைவா இது தான நிறைவா?
உணர்ந்தேன் உனையே உனையே
மறந்தேன் எனையே எனையே
பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே
Oh கல் என்று நினைத்தேன் உனையே
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா?
♪
வேதங்கள் மொத்தம் ஓதி
யாகங்கள் நித்தம் செய்து
பூஜிக்கும் பக்தி அதிலும் உன்னை காணலாம்
பசி என்று தன் முன் வந்து
கை ஏந்தி கேட்கும் போது
தன் உணவை தந்தால் கூட உன்னை காணலாம்
உன்னை காண பல கோடி
இங்கு வாரி இறைக்கிறார்கள்
எளிதாக உன்னை சேர
இங்கு யார் நினைக்கிறார்கள்?
அலங்காரம் அதில் நீ இல்லை
அகங்காரம் மனதில் இல்லை
துளி கள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருக்கிறாய்
உணர்ந்தேன் உனையே உனையே
மறந்தேன் எனையே எனையே
♪
அகம் நீ ஜகம் நீ
அணுவான உலகின் அகலம் நீ
எறும்பின் இதய ஒளி நீ
களிரின் துதிக்கை கணமும் நீ
ஆயிரம் கை உண்டு என்றால்
நீ ஒரு கை தர கூடாதா?
ஈராயிரம் கண் கொண்டாய்
உன் ஒரு கண் என்னை பாராதா?
உன்னில் சரண் அடைந்தேன் இனி நீ கதியே
பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே
கல் என்று நினைத்தேன் உனையே
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா?