00:00
04:04
அடி அழகே அழகே
மெதுவாய் தொலைந்தேன் நானே
என் இதயம் உருக
தீயை வைத்தாய் நீயே
ஓ தேவதையை தேட
தேவை இல்லையே
நீ என்னுடைய தேவதை
பொய்யே இல்லையே
கண்ணெதிரே என்னை
காணவில்லையே
இன்று என்னை தேட
எனக்கு தோணவில்லையே
பூ போல நீயும் பேச
பெண்ணே நானும் தூங்கலையே
தீ போல பார்வை வீச
திணறி போனேன் தாங்கலையே
நோயாக பெண்ணே
என் உள்ளே வந்தாயே
தாயாகி பின்னே
என்னை தாங்கி கொண்டாயே
யாரிடமும் நெஞ்சம்
சாயவில்லையே
பேரழகி உன்னை கண்டேன்
மீளவில்லையே
யாரிடமும் நானும்
தோற்க வில்லையே
பார்வையாலே தாக்கி சென்றாய்
தாங்கவில்லையே
நீ பேசும் பொம்மையா
என் வாழ்வின் நன்மையா
நீ காதல் தெய்வமா
அன்பில் செய்த வரமா
அடி அழகே அழகே
மெதுவாய் தொலைந்தேன் நானே
காலை நேரம் இன்னும்
மாறவில்லையே
கண்கள் ஓரம் உன் கனவு
தீரவில்லையே
வேலையேதும் செய்ய
தோணவில்லையே
உன்னுடைய எண்ணம் நெஞ்சில்
நீங்கவில்லையே
முதல் காதல் என்பதே
ஒரு வலி அல்லவா
அது தந்த வலியோ
கொஞ்சம் சுகம் அல்லவா
என் இதயம் உருக
தீயை வைத்தாய் நீயே
பூ போல நீயும் பேச
பெண்ணே நானும் தூங்கலையே
தீ போல பார்வை வீச
திணறி போனேன் தாங்கலையே
நோயாக பெண்ணே
என் உள்ளே வந்தாயே
தாயாகி பின்னே என்னை
தாங்கி கொண்டாயே
தேவதையை தேட
தேவை இல்லையே
நீ என்னுடைய தேவதை
பொய்யே இல்லையே