background cover of music playing
Yaar Intha - Haricharan

Yaar Intha

Haricharan

00:00

05:04

Similar recommendations

Lyric

யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே

இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே

என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ...

கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள்

நெஞ்சைக் கிழிக்கிறாள் ஒ...

கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்

தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்

என்னை ஏதோ செய்தாள்...

யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே

இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ஒ...

என் வீட்டு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்

எப்போதும் வேண்டும் என்று கேட்பேன்

அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்

அதிகாலை சூரியனை பார்ப்பேன்

கண்ணாடி வளையலைப் போல கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்

கால் தீண்டும் கொளுசில் என்னோட மனசை சேர்த்து கோர்க்கவே தவிப்பேன்

காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன்

கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்

என்னை ஏதோ செய்தாள்...

யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே

இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே

நான் கொஞ்சம் பார்த்தால், எங்கேயோ பார்ப்பாள்

பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்

எனை பார்த்து சிரிப்பாள், நான் பார்த்தால் மறைப்பாள்

மெய்யாகப் பொய்யாகத்தான் நடிப்பாள்

பெண் நெஞ்சம் புதையலைப் போல

எப்போதும் யாரும் அறிந்ததேயில்லை

ஆண் நெஞ்சின் துடிப்பும்

அன்றாடம் தவிப்பும்

பெண்கள் மதிப்பதேயில்லை

மனம் நொந்த பிறகே

முதல் வார்த்தை சொல்வாள்

மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்

என்னை ஏதோ செய்தாள்...

யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே

இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே

என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ...

கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள்

நெஞ்சை கிழிக்கிறாள் ஒ...

கூட்டத்தில் இருந்தும் தனியாகத் தெரிந்தாள்

தோட்டத்தில் மலர்ந்த பூவாகத் திரிந்தாள்

என்னை ஏதோ செய்தாள்...

- It's already the end -