00:00
04:46
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
♪
தீண்ட வரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே
வேண்டும் ஒரு சூரியனே நீ அனுப்பு குளிர் கேட்கிறதே
கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே
என் இதழ் உனை அன்றி பிறர் தொடலாமா
இரவினில் கனவுகள் தினம் தொல்லையே
உறக்கமே எனக்கில்லை கனவில்லையே
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
♪
கோவிலிலே நான் தொழுதேன்
கோல மயில் உன்னை சேர்ந்திடவே
கோடி முறை நான் தொழுதேன்
காலமெலாம் நீ வாழ்ந்திடவே
உன் முகம் நான் பார்க்க கடிதமே தானா
வார்த்தையில் தெரியாத வடிவமும் நானா
நிழற்படம் அனுப்பிடு என் உயிரே
நிஜம் இன்றி வேறில்லை என்னிடமே
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்