00:00
03:27
தற்காலிகமாக இந்த பாடலுக்கான தொடர்புடைய தகவல்கள் இல்லை.
இரு விழிப்பாதையில் காத்திருந்தேன்
இந்த தாமதம் ஏனோ நிலவே
தலையணை தூக்கத்தை நான் தொலைத்தேன்
என் கண்களில் இல்லை கனவே
புல்வெளி கூட்டத்தில் நீ தெரிந்தாய்
ஒரு பூச்செடி போலே தனியே
இடம் பொருள் யாவுமே மறந்து விட்டேன்
நீ எந்தன் உலகம் இனியே
இவள் போலே ஒரு இன்பம் துன்பமோ யாரோ
மதில் மேலே ஒரு பூனையாகிறேன் நானோ
நான் கடந்து போகும் நாட்குறிப்பில்
மயிலின் இறகாய் நீ இருப்பாய்
இமெயில் இதழாய் நீ சிரித்தாய்
கண்ணில் கைதானேன்
♪
ஒரு நாள் நடந்ததெல்லாம் மீண்டும் வராதோ
அருகே நீ இருந்தும் ஆசை தீராதோ
வெண்ணிற மேகம் தன்னாலே
தூரலை பொழியிது உன்னாலே
மீன்கள் கண்ணாலே
தூண்டிலை திருடி போனாலே
♪
தனியே உன்னை காணும் போது
தலை மேல் அந்த வானம் ஏது!
வெளியில் வந்த போன போது
விளக்கம் சொல்ல வார்த்தையே ஏது!
திரும்பும் எல்லாம் திசையானாய்
தித்திக்கின்ற விஷமானாய்
நினைவால் எந்தன் வசமானாய்
நெஞ்சுக்குள்ள இசையானாய்
என் கைரேகையே உந்தன் கூந்தல் கீறல்கள் தானே
மறவேனே உயிர் வாழும் நாள் வரை
அட எட்ட நின்று பட்டாம்பூச்சி வட்டம் போடுதே
உன்ன முதல் முதல் பார்த்த நொடியே
ரெட்ட கண்ணு கட்டிப்போட கட்டம் கட்டுதே
உன் முகவரி என்ன அடியே