00:00
03:04
ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி
காடோடு பாலை வயல்வெளி தாண்டி
நாடோடி அலைகிறேன் உனைத் தேடி
எங்கேயும் எங்கேயும் உன் தடம் இல்லை
நீ இல்லா மண்ணேதும் என் இடம் இல்லை
சில ஆயிரம் ஆண்டாய் காத்திருந்தேன்
நூறாயிரம் ஆசைகள் சேர்த்திருந்தேன்
ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி
காடோடு பாலை வயல்வெளி தாண்டி
நாடோடி அலைகிறேன் உனைத் தேடி
♪
இலையோடும் மலரோடும் உன் விரல்ரேகை
வழியெல்லாம் வழியெல்லாம் உன் குழல் வாசம்
நீரோடை முழுதும் உன் வேர்வை கயல்கள்
முற்புதரின் இடையில் உன் பார்வை முயல்கள்
இத்தேடல் முடிந்தால் நீ அங்கே இருந்தால்
என் நெஞ்சம் உடைந்தாலும் உடையும்
கவிதைகள் அனைத்தும் தொலைத்த ஓர் மொழியாய்
உனை உனை இழந்தே வாடுகிறேன்
தனக்கெண்ட விழியை தொலைத்த ஓர் கனவாய்
திசைக் கேட்டு தரி கேட்டு ஓடுகிறேன்
ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி
காடோடு பாலை வயல்வெளி தாண்டி
நாடோடி அலைகிறேன் உனைத் தேடி, உனைத் தேடி