00:00
02:44
யாரோட யாரோட என் காதல் கதை பேச
உன் கூட உன் கூட எதை வச்சு நான் பேச
மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்த தவிக்கும்
உன்ன பார்த்ததுமே அத்தனையும் செத்து கிடக்கும்
ஒத்த சொல்ல நீயே சொல்ல கேட்க நினைக்கும்
மனம் உன்ன கண்ட மட்டும் ஏனோ பரபரக்கும்
பஞ்சாரத்தில் மாட்டிக்கிட்ட கோழி குஞ்சாய் கிடக்கிறேனே
பஞ்சவர்ண கிளியே உன்ன நெஞ்சுக்குள்ள சுமக்கிறனே
♪
சொந்தம் ஒன்னு இல்லையேனு
ஏங்கித் தவிச்சேன் உன்ன கண்ட பின்னால தூங்கி முழிச்சேன்
என்னுடைய பேர நீயும் சொல்ல ரசிச்சன்
உன்கிட்ட மட்டும்தான் மெய்யா சிரிச்சேன்
உன்னுடைய மனசுக்குள்ள இருப்பத படிக்க தெரியலையே
சூசகமா பேசுற வாசகம் எதுவும் புரியலையே
தரையில் விழுந்த மீன்னாட்டம்
தவிக்கிற நானும் உன்கிட்ட
ஓங்கி அறைஞ்சு சொல்லாம எதுக்குடி என்னை நீ விட்ட
♪
யாரோட யாரோட என் காதல் கதை பேச
உன் கூட உன் கூட எதை வச்சு நான் பேச