00:00
05:01
பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு மெட்டொன்று தந்ததடி

♪
இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதனை யார் அறிவார்
வாழ்கை செல்லும் பாதைதனை யார் உரைப்பார்
இருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு
ஒளி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை
பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
♪
புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா
செவி உணரா இசையை மனம் உணர்ந்ததம்மா
இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்து கொண்டேன்
வாழ்த்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்
அன்று சென்ற இளம் பருவம், அதை எண்ண எண்ண மனம் நிறையும்
அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது வரமே
அதை கை பிடித்தே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை